Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை (8.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 07:45- 08:45 வரை
மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- உயர்வு
தனுசு- குழப்பம்
மகரம்- நற்செயல்
கும்பம்- குழப்பம்
மீனம்- புகழ்
Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (8.10.2022, சனிக்கிழமை)
உங்களுக்கு இன்று கிடைக்கும் வாய்ப்பு முயற்சியை வெற்றியாக மாற்ற வழிவகுக்கும். வேலையில் இன்று சாதகமான தருணமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஆர்டர் கிடைக்கும், நம்பிக்கையான வாடிக்கையாளர் கிடைப்பர். நிதி நிலை நன்றாக உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் நல்லுறவு ஏற்படும். உங்களின் அக்கறை வீட்டில் மதிக்கப்படும். காதலர்களுள் இனிமையான பேச்சு வார்த்தை இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 3
இன்று நீங்கள் சந்திக்கும் மனிதரின் உதவி நன்மை அளிக்கும். தொழிலில் அபாரமான வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த காரியங்கள் கடந்து பணியை சிறப்பாக முடிப்பீர். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும்.
திருமண வாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லுறவு ஏற்படும். நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பீர். உடல்நலத்தில் கவனம் தேவை, ஓய்வு தேவைப்படும். உயர்வு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
Most Read: விருச்சிக ராசிக்கு இந்த 4 ராசிக்காரர்கள் கூட காதல் வந்தால் லைப் வேறலெவல் தான்...!
மனதில் ஏற்படும் பயம் உங்களை தொழிலில் கவனம் செலுத்த ஒத்துழைக்காது. மாணவர்களுக்கு கல்வியில் பயம் ஏற்படும், அறிவுரையால் தெளிவு பிறக்கும். சுய தொழிலில் வழக்கமான வேலை நல்ல பலன் அளிக்கும். பண வரவு உண்டு.
குடும்பத்தில் பொறுமையாக இருப்பீர். வீட்டிற்கு விருந்தினர் வருகை இருக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் கூடும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. குழப்பம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 2
அறிமுகமில்லாத மனிதர் மூலம் உங்களுக்கு தொழிலில் உதவி கிடைக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்வதால் பணியில் கவனம் செலுத்த முடியும். இன்று அலுவலக வேலை அதிகமாகும். செல்வத்தை செலவழிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டில் அமைதி அதிகமாகும், தனிமையில் பொழுதை செலவிடுவீர். வாழ்க்கை துணையின் மூலம் நன்மை நடக்கும். உடல்நலத்தில் சிறிய தொந்தரவு ஏற்படும். நற்செயல்!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
உங்களுக்கு இருக்கும் வேலை அழுத்தம் மனதில் சில குழப்பத்தை அளித்து பணியில் தாமதம் ஆக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. தொழிலில் இன்று விடாமுயற்சி அதிகமாக தேவைப்படும். செல்வ நிலை சொல்லும்படி இல்லை.
குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் ஆனால் உங்களின் மனநிலை சிறிய சலசலப்பை உருவாக்கும். திருமண வாழ்வில் சண்டைகள் ஏற்படும். காதல் வாழ்வில் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. குழப்பம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வதால் பணிகள் சிறப்பாக நடக்கும். ஒருசிலர் பணி நிமித்தமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் வேலையில் விளைவு நல்ல மதிப்பு அளிக்கும். நிதி நிலை நன்றாக உள்ளது, செலவை சமாளிக்கும் அளவு பண வரவு இருக்கும்.
குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், வீட்டில் அனுசரித்து செல்லுவீர். திருமண பந்தம் சந்தோஷமாக செல்லும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், உணர்ச்சிவசப்படாதீர். புகழ்!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…