Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (9.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 06:15- 07:15 வரை
மாலை: 03:15- 04:15 வரை
ராசிபலன்
மேஷம்- நற்செய்தி
ரிஷபம்- போட்டி
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- அமைதி
கன்னி- புகழ்
தொழிலில் பல நாட்களாக எதிர்பார்த்த நிலையை இன்று அடைய முடியும். அலுவலகத்தில் சிக்கலாக இருந்த செயலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது, சுப செலவு அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை இன்பமாக செல்லும், கணவன் மனைவி உறவில் சிறிய சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். காதல் வாழ்வில் அமைதி வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நற்செய்தி!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
இன்று வழக்கமான வேலைகளைக் கூட வேகமாக செய்ய வேண்டியதாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் பார்ப்பது கடினமாக இருக்கும், போட்டிகள் அதிகமாகும். மூன்றாவது மனிதர் உதவி தேவைப்படும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது.
வீட்டில் மனஸ்தாபம் உருவாகும், அமைதியாக இருப்பீர். இல்லறத்தில் வாக்குவாதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் இன்று நிம்மதி கிடைக்கும். உடல்நலத்தில் பதட்டம் சிறிய பிரச்சனையாக இருக்கும். போட்டி!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
இன்றைய தினம் அமைதியாக இருக்கும், மனம் எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். தொழில் ஸ்தானம் சுமுகமாக செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவர். பண வரவு உண்டு.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் கலகலப்பாக பேசுவீர். சுற்றத்தாருடன் சந்தோஷமாக பேசுவீர். காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல்நலத்தில் நரம்பு பிடிப்பு அல்லது சுளுக்கு போன்ற தொல்லைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
இன்று எதிர்பார்க்காத சூழலில் இருந்து கிடைக்கும் உதவி உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் அளிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். நாணயமான வாடிக்கையாளரை அறிவீர். செல்வ நிலையில் ஓரளவு வரவு உண்டு, கையிருப்பு செலவை சமாளித்துவிடும்.
குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும், நிம்மதி கிடைக்கும். காதல் வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பீர், உறவு பலமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆதரவு!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
இன்றைய தினம் யாருடனும் வம்பு இழுக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். மனதில் பலவித எண்ணங்கள் குழப்பம் அளிக்கும். தொழிலில் பெரிய முதலீடு செய்வதை யோசிக்கவும், புதிய முயற்சி வேண்டாம்.
குடும்ப வாழ்க்கை பொறுமை கடைப்பிடித்தால் பிரச்சனை இல்லை. காதல் வாழ்வில் சண்டைகள் ஏற்படும், வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உடலுக்கு ஓய்வு தேவைப்படும். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
யதார்த்தமாக செய்யும் செயல் அனைவரின் மத்தியில் நல்ல பெயரை அளிக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும், சக பணியாளர் பாராட்டு கிடைக்கும். மனதில் திருப்தி இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஆடம்பர செலவு செய்வீர்.
குடும்பத்தில் சந்தோஷம் கூடும், குடும்ப உறுப்பினரின் மனதை அறிந்து கொள்வீர். காதல் வாழ்வில் நேர்மையான அணுகுமுறை மதிப்பு அளிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும், உடல் சோர்வடையும். புகழ்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…