Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (9.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 06:15- 07:15 வரை
மாலை: 03:15- 04:15 வரை
ராசிபலன்
துலாம்- சினம்
விருச்சிகம்- அச்சம்
தனுசு- நன்மை
மகரம்- வெற்றி
கும்பம்- தனம்
மீனம்- நிறைவு
Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (9.10.2022, ஞாயிறு)
இன்றைய தினம் மனதில் ஏற்படும் பயம் மற்றவர்கள் மீது கோபமாக பாயும். அலுவலகத்தில் பதட்டமாக இருப்பீர், பணியில் சில சிக்கலை ஏற்படுத்தி கொள்ளுவீர். வியாபாரம் வழக்கம்போல நடக்கும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை.
குடும்பத்தில் சிறிய உரையாடல் வாக்குவாதமாக மாறும். இரத்த சொந்தத்திடம் மனஸ்தாபம் ஏற்படும், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களின் அறிவுரை நிலைமை புரிய வைக்கும். பதட்டமான மனநிலை ஆரோக்கியத்திற்கு கேடு உருவாக்கும். சினம்!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
இன்று அனுகூலமான பலன் கிடைக்காது, அலுவலகம் சார்ந்த பணிகள் கொஞ்சம் எரிச்சல் அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் குழப்பம் எதிர்கால முடிவில் பயத்தை அளிக்கும்.
வீட்டில் அமைதியாக பொழுதைக் கழிப்பீர், தனிமையில் இருக்க விரும்புவீர். கணவன் ,மனைவி உறவில் பேசும் தொடர்பு குறையும், மௌனம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் வயிறு அல்லது நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 2
இன்றைய தினம் உங்கள் பொறுப்பு கூடும். அலுவலகத்தில் பணிகள் கூடும், புதிய யுக்திகள் நல்ல பலன் அளிக்கும். கல்வி ஸ்தானம் முன்னேற்றம் அடையும். உங்கள் திறமையான அணுகுமுறை வருமானத்தை உயர்த்தும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு.
திருமண வாழ்க்கையில் பொறுமை தேவை, ஆத்திரமான பேச்சு வீட்டின் ஒற்றுமையை பாதிக்கும். காதல் வாழ்வில் சில முக்கிய முடிவுகள் ஏற்பட வேண்டி இருக்கும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
தொழிலில் இருந்த தடைகளைக் கடந்து எதிர்பார்த்த நிலையை அடைய முடியும், நாணயமான மனிதர்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பேச்சு திறமை வெளிப்படும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவிக்குள் வெளிப்படையான பேச்சு இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், திருமண பந்தமாக மாற்ற முயல்வது பலனளிக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
இன்றைய தினம் கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும், ஆனால் தேவைகளை பூர்த்தி செய்ய கையிருப்பு சரியாகும். தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும். கல்வியில் ஆர்வத்துடன் படிப்பர், சிலருக்கு உயர்கல்வி பற்றி தெளிவு கிடைக்கும்.
இல்லற வாழ்க்கை அமைதியாக இருக்கும், யதார்த்தமான நடத்தை வீட்டில் மதிக்கப்படும். காதல் வாழ்வில் நம்பிக்கை அதிகமாகும். கால் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் மருத்துவ செலவு ஏற்படும். தனம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
இன்று செழிப்பான நாள், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. மாணவர்களுக்கு சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும். மனதில் இருக்கும் உற்சாகம் இலக்கை அடைய சிறப்பாக முயற்சி செய்யும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை.
குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும், வீட்டில் பெரியவரின் மனதை மகிழ்ச்சியாக்குவீர். நண்பர்கள் மூலம் நல்ல மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நிறைவு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…