Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எப்பொவும் செலவு ஆகறத விட இன்னைக்கு அதிகமாவே செலவாகும்… இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும் - 14.9.2022 ராசிபலன்!

Gowthami Subramani September 13, 2022 & 17:00 [IST]
Nalaya Rasi Palan: எப்பொவும் செலவு ஆகறத விட இன்னைக்கு அதிகமாவே செலவாகும்… இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும் - 14.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasipalan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை (14.09.2022) தினத்தில், கிரக நிலை மாற்றத்தால் ஏற்படும் பலன்களைப் பற்றி இதில் காண்போம். அதன் படி, துலாம் ராசி முதல் மீனம் ராசி வரையிலான 6 ராசிகளுக்கான பலன்கள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் உள்ளிட்டவற்றைக் காணலாம்.

நல்ல நேரம்

காலை: 7:45 - 8:45 வரை

மாலை: 04:45- 05:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (14.09.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு ஏற்றத் தாழ்வின்றி சமமான நாளாக உள்ளது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டுவதுடன் புதிய நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கொடுத்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சிக்கலான பணிகளையும் சுலபமாக முடிப்பீர்கள். பயணங்கள் தொடர்பாக சிறிது அலைச்சல்கள் ஏற்படும்.

https://lh4.googleusercontent.com/SGr4ScDd98YmUEl1fiXunxW1fsBONQ7IO8eB2HmZc1ytv4HvLflBioHKGSS9PTfsyj9QxyerO8MaYXbN10HO6QqV2mSjMC6gEHGBHvyqrlJigijJy8_UFrF-G_YObSerEbb7tEFDMOqZgPUEU9cw5l5mmysjSwnruTGKwpY6rpwgc0ZfCBN4dYDosA

துணையுடன் நல்லுறவை வளர்க்க போராட வேண்டிய சூழலாக அமையும். இதன் மூலம் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உருவாக்கும். பணவரவு கிடைக்கும். இது உங்களுக்குத் திருப்தியைத் தரும். ஆரோக்கியம் மகிழ்ச்சி தரக் கூடியவையாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இந்த நாள் மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய நாள். குறிக்கோள்களை அடைய செயலாற்ற வேண்டிய முக்கியமான நாள். பணியில் மிகுந்த கவனத்துடன் உறுதியாக இருப்பீர். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவில் புரிந்துணர்வு குறைந்து காணப்படலாம். எனவே, நெருக்கமானவர்களிடம் பேசும் போது கவனமாகப் பேசுவது நல்லது.

https://lh3.googleusercontent.com/6bE9W3sJcIDMbrs04Zaw4NgeqYuedZXFY_U_LaVjjDiTgwfjjVVXOvYk1JtQhmXn152TVULyKI_nDPhziCuvgvSp6EFTsi9YcX2mGCmh8OZcsw4uqo-JOuav9hsiYsofTAMegHog6PdbPjEg_K80XwjsWCmj8f9sl4_r11Yks27omIEK2mW81kDGIg

நிதி நிலை வளர்ச்சி அமோகமாக உள்ளது. பண வரவு மென்மேலும் கூடும். உங்களது சேமிக்கும் ஆற்றலும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

குடும்பத்தில் பிரச்சனைகள் வரக் கூடும். இதனால், மனக்கவலை உண்டாகலாம். கவலையை விடுத்து, செய்ய வேண்டிய காரியங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான சரியான நாள் அல்ல. பணியில் அதிக வளர்ச்சி கிடைக்காது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் பணியை முடிப்பது சிரமமாகக் காணப்படும்.

https://lh6.googleusercontent.com/qTVEbbXELhBMtsRMOciOYM4GGOecvGjnUDTrYzbEzCXtdiLJKFEAr47upvdDPdZUMQXbdx5v_5gm5laz-1ZHew8Hkum8ZiSqgeG9JJtGHlRowNx-A14tTBrUJh4f9lgCE7l1K-54pf8Cnfzq0i97muMgZLQGbZxXSdaUuxdG5F2097bVuzEDYd7HZw

துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் காணப்படும். பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படலாம். உடல் நலத்தில் மிகுந்த கவனம் கொண்டு செயல்பட வேண்டும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு சோர்வு நிலை ஏற்படலாம். காலை எழுந்தவுடன் யோகா செய்வதால், ஒரு தெளிவு கிடைக்கும். சொத்து சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால், மனக்கவலை உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக பணிச்சுமை காரணமாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். பணிச்சுமையை சமாளிக்க திட்டமிடுவது அவசியம்.

https://lh3.googleusercontent.com/6ymZCtrn73cQPvPoM_iPDpu79pHs044x4D3cyzfMqFfbZf6FrwYSaCyfmIFYdr_nXSVqYaFRG_eQCuQe73KWhV-WyRc5n1e0zRb3HAyr3yqXZD7fywcmkmKSJOpTDEuMIjyxMZaom74zbUphb7020nhOSZhKWAjzGfac2urD4ceDVevJoiAoU700ug

உங்கள் துணையுடன் தைரியம் குறைந்து காணப்படுவீர்கள். உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேச வேண்டும். நிதி வளர்ச்சி நன்றாக இல்லாததால் பண இழப்புகள் ஏற்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை தரக்கூடியவையாக அமையும்.. தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமையும். அமைதியான மற்றும் திருப்தியான மனநிலை காணப்படும். பணியில் சிறந்து விளங்குவீர்கள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்களது தனித்திறமை வெளிப்படுத்தும் நாளாக அமைகிறது. இன்றைய நாளில் மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

https://lh4.googleusercontent.com/O28xOFjKZgBV55oFbgFZHKW6lgJBMKphm-Hy3ff5_y5H7ydB_CKOsdG1Eek6oox72mseZVmORHvZscrQlPkXVraq__0k61OCF4sg46rVHUnuJavEyqBpxPVpMi_V6XAWrVCXS752STU1nxmI8i0QliIiPnctpmQhQK8N-mkZ8FvDkit_fOe-_m9MAQ

போதுமான பணம் இருப்பதுடன் திருப்திகரமான நாளாக அமைகிறது. பணம் சேமிக்கக் கூடிய ஆற்றலும் இன்று நன்றாகக் காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

மனச்சோர்வுடன் காணப்படும் நாளாக உள்ளது. அன்றாட செயல்களில் அணுகுமுறை வேண்டும். அதே சமயத்தில் ஏமாற்றங்களை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் தைரியம் கொண்டிருக்க வேண்டும். தொழிலில் சரியான ஒத்துழைப்பு கிடைக்காது. இதனால் கவலை ஏற்படலாம். துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் இருக்க வேண்டும். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும்.

https://lh4.googleusercontent.com/BGviQPd-PWBaEfCUcUp8yeStxUohDslmBQ75-eN_4SbqOdXt8m9INTxFXndTtQkABdWolkqZHDLBuXZR38WLeVC4_0zoxSDDQ8KBKX9nZRlSM-KYIbfh2qKrJ7UhRbk3LlY7-tzuVMFDVMuqdASyKPQnfTgudGkx-3ZGjLsC7BeZopgOevSEK0vugA

இன்று வழக்கத்தை விட அதிகமான கூடுதல் செலவுகள் வரலாம். எனவே திட்டமிட்டு பண இழப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்  

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்