Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan in Tamil: இந்த வாரம் வெற்றியின் உச்சத்தில் நிற்க அந்த ராசிக்காரர் இவரா...! ஜூன் 5- 11 வார ராசிபலன்! இந்த வாரம் கன்னி ராசிக்காரருக்கு இப்படி ஒரு நிலை..!

Manoj Krishnamoorthi June 03, 2022 & 19:05 [IST]
Next Week Rasi Palan in Tamil: இந்த வாரம் வெற்றியின் உச்சத்தில் நிற்க அந்த ராசிக்காரர் இவரா...! ஜூன் 5- 11 வார ராசிபலன்! இந்த வாரம் கன்னி ராசிக்காரருக்கு இப்படி ஒரு நிலை..!Representative Image.

சுபகிருது வைகாசி மாதம் 22- 28 வரை (ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை) வார ராசிபலனில் (Next Week Rasi Palan in Tamil) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதையும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதைப் பற்றி அறிய எங்கள் பதிவைப் பின்தொடரவும்.

மேஷம்

பொது பலன்: வெளியில் கடுமையாக நடந்தாலும் உள்ளத்தில் அன்பை அஸ்திவாரமாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தொழிலில் பலவித மாற்றங்களை சந்திக்கப் போகிறீர்கள்.மனதில் பல எண்ணவோட்டங்கள் மேம்படும். செல்வ நிலையில் நல்ல பண வரவு இருக்கும். உங்களின் பேச்சு திறமை இந்த வாரம் ஓங்கி இருக்கும். திருமணமான இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் நல்லுறவு இருக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு  உள்ளது. மாணவர்கள் கடினமான பாடத்தையும் எளிமையாக கற்கும் வழியை அறிவர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. சுகம்! 

அஸ்வினி: பண வரவு உண்டு. 

பரணி: தொலைதூர பயணம்  செய்வீர்கள்.

கிருத்திகை: தந்தை வழியில் அனுகூலம் கிடைக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் நல்ல பலன் அளிக்கும்.  

ரிஷபம்

பொது பலன்: நிதானமான மனநிலையைக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களை வெளிப்படையாக மனதில் நினைப்பவற்றைப் பேசத்தூண்டும். வாரத்தின் முற்பாதியில் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மூலம் நடக்கும் காரியம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்துடன் அன்யோன்யமாக இருப்பீர்கள்.  கணவன் மனைவிக்கிடையில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். தொழிலில் உங்கள் மீது அதிகமான பொறுப்புகள் இருக்கும், சிலருக்கு  எதிர்பார்க்காத பதவி உயர்வு கிடைக்கும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. உடல்நலத்தில் சிறிய கோளாறு ஏற்படும். நன்மை!

கிருத்திகை: பயணம் செய்வீர்கள்.

மிருக ஸீரிஷம்:  நன்மைகள் அதிகமாக நடக்கும்.

ரோகிணி: திருமணத் தடை நீங்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: அம்மன் வழிபாடு

பரிகாரம்: தினமும் லட்சுமி தேவி வணங்கி மாலைப் பொழுதில் உங்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.  

மிதுனம்

பொது பலன்: தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மிதுன ராசிக்காரரே உங்கள் ராசிக்கு இந்த எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் சில விவாதம் இருக்கும், உடன்பிறப்பு மூலம் சில வாக்குவாதம் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் இன்பமாக இருக்காது, உங்கள் நம்பிக்கை இந்த வரம் சற்று குறைந்து காணப்படும்.  ஆன்மீக நாட்டம் இந்த வாரம் அதிகமாக தேவைப்படும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை, இயல்பாக உள்ளது. 

மிருக ஸ்ரிஷம்: கவனமாக இருக்க வேண்டும்

திருவாதிரை: தன்னம்பிக்கை அதிகமாக தேவை  

புனர் பூசம்: ஆரோக்கியத்தில் கவனம் தேவை 

வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ண பகவான்

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு உணவளிக்க வேண்டும்.

கடகம்

பொது பலன்: உயர்ந்த இடத்திலிருந்தாலும் பணிவான குணத்தால் அனைவரையும் கவரும் கடக ராசிக்காரரே இந்த வாரம் மற்றவர்கள் செய்யும் காரியம் உங்களுக்கு அதிக நன்மை அளிக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தொழிலில் உங்கள் வளர்ச்சி எதிர்பார்க்காத அசுர வளர்ச்சியாக  இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான ஆலோசனையின் போது உங்கள் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.  நிதி நிலை நன்றாக உள்ளது, பண நெருக்கடி குறையும். முன்னேற்றம்! 

புனர் பூசம்: சுப நிகழ்ச்சி நடக்கும் 

பூசம்: குடும்பத்துடன் வெளியில் செல்வீர்கள்

ஆயில்யம்: தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும் 

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வ வழிபாடு

பரிகாரம்: நன்மைகள் அதிகமாக நடக்க ராசி கற்களை அணிய வேண்டும்.

சிம்மம்

பொது பலன்: வீழ்ந்தபோதெல்லாம் முயற்சி செய்தால் வெற்றி நம் அருகில் என்பதை உணர்த்தும் வகையில் தன்னம்பிக்கையின் சிகரமாகத் திகழும் உங்களுக்கு இந்த வாரம் மனநிலை குழப்பமாக இருக்கும், செய்யும் காரியத்தில் முடிவைப் பற்றிய குழப்பம் அதிகமாக இருக்கும். எதிர்பார்க்காத பண வரவு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், அதிகமான ஓய்வு தேவைப்படும்.  சிந்தனை!

மகம்: நிதானமாக இருப்பீர்கள், பயணத்தில் ஜெயம் உண்டாகும்

பூரம்: நிலுவையிலிருந்த செல்வம் வரும்

உத்திரம்: மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும்

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்