Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,456.90
368.57sensex(0.50%)
நிஃப்டி22,282.80
135.80sensex(0.61%)
USD
81.57
Exclusive

Weekly Rasi Palan In Tamil: சந்திரனின் நிலை மாற்றத்தால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றமா....!

Manoj Krishnamoorthi August 05, 2022 & 11:10 [IST]
Weekly Rasi Palan In Tamil: சந்திரனின் நிலை மாற்றத்தால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றமா....!Representative Image.

ஜோதிடம் என்பது கிரக நிலையின் மாற்றத்தைக் கொண்டு நம் வாழ்வைக் கணிக்கும் முறையாகும், சுபகிருது வருடம் ஆடி மாதம் 22- 28  (7.08.2022- 13.08.2022) தினங்களில் (Vara Rasi Palan) 12 ராசிகள் அடையும் பலன் பற்றி அறிய இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும். 

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசியில்  இராகு பகவான் இருப்பது உங்களுக்கு தடுமாற்றங்கள் பல உருவாகினாலும் முக்கியமான  அனுபவம் கிடைக்கும், நிதி நிலை சாதகமாக உள்ளது. திட்டமிட்டபடி நடப்பது சிரமமாக இருக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  பெருமாள்

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 7

ரிஷபம்

இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணமாகும், மனதில் வருத்தம் இருக்கும். தொழிலில் வெற்றி பெற முடியவில்லை என்ற குழப்பம் அதிகமாக இருக்கும். உணவு பழக்கத்தால் உடல்நலம் கோளாறு வரும். 

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 8, 9, 10

மிதுனம்

இந்த வாரம் சிறப்பாக இருக்கும், இதுவரை இருந்த செலவுகளைத் தாங்கும் அளவு நல்ல வரவு இருக்கும்.  தொழிலில் எடுக்கும் நிதானமான முடிவு நன்மை அளிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. 

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 10, 11, 12

கடகம்

உங்கள் ராசியின் அதிபதியான சந்திர பகவான் தன் சொந்த வீட்டில் நிச்சம் கொள்வதால் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் வேலைச் சுமை அதிகமாகும். நிதி நிலை சாதகமாக இல்லை.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 12, 13, 14

சிம்மம்

உங்கள் ராசியில் புதன் நிலை சாதகமாக இருப்பதால் சிக்கல்கள் தீர்ந்து அமைதியான மனநிலையைப் பெற முடியும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். பயணங்கள் உடலை சோர்வாக மாற்றும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

கன்னி

புதனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் ராசியில் சந்திரன் நிச்சம் கொள்வதும் செல்வ வரவை அளிக்கும். மனம் தெளிவு கொள்ளும். தொழிலில் எண்ணிய செயல்கள் நன்றாக நடக்கும். திருமண பாக்கியம் உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.  

துலாம்

துலாம் ராசிக்காரரே 2 ஆம் வீட்டில் சந்திரன் நிச்ச கொண்டு உள்ளதாலும் சனியின் சாதகமான நிலை உங்களுக்கு நிம்மதியான தருணமாக மாற்றும். தொழில் சுமுகமாக நகரும். குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியும்.  மனம் விரும்பும் பிராயனாம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தொழிலில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வியாபாரத்தில் பெரியளவு லாபம் அளிக்காது. உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.  

தனுசு

குரு ஆசிபெற்ற  உங்களுக்கு இந்த வாரம் சுமுகமாக இருக்கும், தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். மனதில் தைரியம் அதிகமாகும். நிதிப் பிரச்சனை குறையும். உடல் உபாதைகள் குறையும். 

மகரம்

எதிர்பார்க்காத பல நன்மைகள் இந்த வாரம் நடக்கும், தொழில் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். வருமானம் அதிகமாக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிக ஸ்தலம் செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  தெளிவான சிந்தனை இருக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரரே இந்த வாரம் இராகு மற்றும் சுக்கிரன் சேர்கை சாதகமாக இருப்பது பயணம் செய்யும் யோகம் அளிக்கும். பல நாட்களின் முயற்சி பலனளிக்கும்.தொழிலில் உங்களின்  மதிப்பு கூடும். உடலநலப் பிரசச்னை தீரும்.

மீனம்

உங்கள் ராசியில் 9 ஆம் வீட்டில் சந்திரன் நீச்சம் கொண்டது சாதகமான பலன் அளிக்காது, விடாமுயற்சியுடன் உழைக்கும் மன உறுதி அதிகமாக தேவைப்படும், செல்வ நிலையில் செலவு தான் ஓங்கி இருக்கும், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை இருக்கும்.  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Adutha Vara Rasi Palan | Next Week Rasi Palan In Tamil | Vaara Rasi Palan In Tamil | Weekly Horoscope In Tamil | Next Week Rasi Palan | VARA RASI PALAN 2022 August 7 To 13 | வார ராசி பலன்கள் | அடுத்த வார ராசிபலன் 2022 | Vara Rasi Palan | Next Week Horoscope In Tamil |Next Week Horoscope | Weekly Rasi Palan In Tamil | Weekly Rasi Palan

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்