Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்? | Palli Vilum Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்? | Palli Vilum Palan in TamilRepresentative Image.

எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு உயிரனம் தான் பல்லி. இந்த பல்லிகள் வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து உயிரே போகும் அளவுக்கு பயத்தை கொடுக்கும். அப்படி நம் மீது விழுவதால் சாஸ்திர விதிகளின் படி நற்பலன்களும் உண்டு, கெடு பலன்களும் உண்டு. இந்த பலனாது பல்லி உங்களின் மீது விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கும். அந்தவகையில், பல்லி நம் உடல் மீது விழும் இடங்கள் வைத்து நமக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றியும், அப்படி பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரத்தை பற்றியும் இங்கு விரிவாக பார்ப்போம்.

பல்லி விழும் பலன்கள்:

பல்லி நம்முடைய தலையின் இடது பக்கம் விழுந்தால் ஏதேனும் துன்பம் வரும். அதுவே வலது பக்கம் விழுந்தால் கலகம் நடக்கும் என்று சொல்வார்கள்.

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.

கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் தரும் செய்தி உங்களை தேடி வரும். அதுவே வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகமான செய்தி வந்து சேரும்.

மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும்.

காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். அதுவே வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும் என்று சொல்வார்கள்.

மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் லாபம் வரும்.

பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும். கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

தோளின் இடது பக்கம் விழுந்தால் யோகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி தேடி வரும். 

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும். 

முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாபாரத்தில் நஷ்டம் வரும். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை தரும் செய்தி வரும்.

கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் வரும்.

இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம் செய்ய நேரிடும். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு வரும்.

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் தரும் செய்தி வரும் அல்லது துக்க சம்பவம் நடைபெறும்.

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். 

பல்லி விழும் பலன் பரிகாரம்:

பல்லி நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் விழுந்து விட்டால் உடனே பயப்பட வேண்டாம். உடனே தலைக்கு குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு வாருங்கள். கோவிலுக்கு போக முடியாவிட்டால் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வணங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்