தனக்காக வாழாமல் தன் சன்னதிக்காக வாழும் பெற்றோர் தன் மனமறியாமல் சில சமயம் தன் பிள்ளைகளின் மேல் சில மன வருத்தம் கொள்வர், அது காலப்போக்கில் அவர்கள் மறந்தாலும் அவர்கள் மனதில் ஏற்பட்ட மனக்குறை அவர்களின் மறைவுக்கு பிறகும், அவர்களின் சன்னதியை வாட்டும் இதுவே பித்ரு தோஷமாகக் கருதப்படுகிறது.
தன் மனம் அறியாமல் மனதுக்குள்பட்ட கஷ்டம் விருத்தியாகி காலப்போக்கில் அது சாபமாக மாறி தப்பு செய்த பிள்ளைகளை மட்டுமின்றி வருங்காள சன்னதி வரையும் ஆட்டி படைக்கும். குடும்பத்தில் கஷ்டத்தை அளிக்கும் இன்னும் சில நேரங்களில் தீராத மருத்துவ செலவு போன்ற விசயங்கள் அதிகமான இருக்கும், இந்த மாதிரியான நிகழ்வுகள் உங்கள் வீட்டில் நடந்தால் பித்ரு தோஷமாக இருக்கக் கூடும், பித்ரு தோஷமா! என்று கவலைப்பட வேண்டாம். பித்ரு தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை இவ்வாசகத்தில் காணலாம்.
பித்ரு தோஷ பரிகார பூஜை
நாம் உறவினர் வீட்டுக்கு அல்லது நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம் ஒரு சில வீட்டில் எப்போதும் கஷ்டங்களும் இன்னலும் குடி கொண்டு இருக்கும். இதற்கு காரணம் என்பது என்னவாக இருக்கும், என்று பார்த்தால் அவர்கள் வீட்டில் யாராவது துர்மரணம் அடைந்திருப்பர் அல்லது குடும்பத்தில் மூத்தவர்களை அவர்களின் முதுமை காலத்தில் சரியாக கவனித்து கொள்ளாமல் இருந்தால் அவர்களின் மன வருத்தம் அவர்களின் மறைவுக்கு பிறகு அடுத்த தலைமுறையைப் பாதிக்கும்.
தலைமுறையினருக்கு பாதிப்பு இருக்கும் என்றால் குழந்தை பாக்கியம் இருக்காது, எல்லா செல்வங்களும் இருந்தாலும் வீட்டில் வேறுமை அதிகமாக இருக்கும். இதற்கு பித்ரு தோஷ பரிகார பூஜை செய்தால் குடும்பத்தின் கஷ்டம் குறையும்.
ஆத்மா சாந்தி அடையாத இறந்தவரின் ஆத்மா அனுபவிக்கும் சலனம் அவர்களின் குடும்பத்தை அதிகமாக பாதிக்கும், இதை எப்படி சரி செய்வது என்ற பிரச்சனை உங்களுக்கு இருக்கும், அதை கீழ்வரும் பரிகார வழி உதவும்.
பொதுவாக தோஷத்தில் இருந்து விடுபட சில பரிகாரம் செய்யத்தான் வேண்டும், இதற்கு ராமேஸ்வரம் சென்று இறந்தவருக்கு அவர் ஆத்மா சாந்தி அடைய 'திலா ஹோமம்' செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களின் ஆன்மாவைக் குளிர வைத்து பிர்த்ரு சாபத்தை விலக்கும். இந்த பரிகாரம் குடும்பத்துக்கு நல்லதாகும், உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் மேற்கூறிய பரிகாரத்தைக் கஷ்டத்துடன் கஷ்டமாக செய்தல் வேண்டும்.
ஒருவேளை 'திலா ஹோமம் செய்ய முடியவில்லை என்றால் வருத்தமடைய வேண்டும், குல தெய்வத்தின் கருணை எவ்வளவு பெரிய பிரச்சனையும் சரி செய்யும். எனவே தினமும் குலதெய்வத்தை வணங்கி தினசரி வேலையைத் தொடங்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது பசுமாட்டுக்கு உணவு அளிப்பது முன்னோர்களின் மனம் வருத்தமாகும் படி நடந்ததால் ஏற்படும் கஷ்டத்தைக் குறைக்கும்.
இவ்வாறு தினமும் குல தெய்வ வழிபாடு செய்வது உங்களை 'திலா ஹோமம்' நடத்த வழி செய்யும். மேலும், திருப்தியடையாமல் தலைமுறை தலைமுறையாக இருந்த முன்னோர்களின் ஆத்மா திருப்தி பெற்று நல்வாழ்வு வாழ ஆசிர்வதிக்கும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…