Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம்? தெரிஞ்சிக்கோங்க.. | Rasi Natchathiram List in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம்? தெரிஞ்சிக்கோங்க.. | Rasi Natchathiram List in TamilRepresentative Image.

ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27 என்று நமக்கு தெரியும். ஆனால், எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம் என்று நம்மில் பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கும். வாங்க தெரிந்துக்கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் - 4 பாதங்கள் உள்ளன. ஆக மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் 9 பாதங்கள் என்பதன் அடிப்படையில், 108 பாதங்களும் 12 வீட்டில் அமர்ந்திருக்கும். அதன்படி, எந்த ராசி என்ன நட்சத்திரம் வரும் என்பதை பார்க்கலாம்.

12 ராசி 27 நட்சத்திரங்கள்:

மேஷம் - அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய

ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய

மிதுனம் - மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய

கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய 

துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய 

விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய

தனுசு - முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய 

மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய 

கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய 

மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

12 ராசிகள்:

மேஷம், சிம்மம், தனுசு - நெருப்பு ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் - நிலம் ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசிகள்

கடகம் , விருச்சிகம், மீனம் - நீர் ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் - சர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் - ஸ்திர ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் - உபய ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்