Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

சனி வக்ர பெயர்ச்சி 2023: ஆபத்தை ஏற்படுத்தும் சனி வக்ர பெயர்ச்சி என்னைக்கு? தேதி & நேரம்.. | When is Sani Vakra Peyarchi 2023

Nandhinipriya Ganeshan Updated:
சனி வக்ர பெயர்ச்சி 2023: ஆபத்தை ஏற்படுத்தும் சனி வக்ர பெயர்ச்சி என்னைக்கு? தேதி & நேரம்.. | When is Sani Vakra Peyarchi 2023Representative Image.

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார். 

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 141 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். 

ஒரு கிரகம் பின்நோக்கி நகரும்போது அதாவது வக்கிரமடையும்போது, சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு எல்லாம் சில நன்மைகளையும், யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு பன்மடங்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

சனி வக்ர நிலை நடைபெறும் தேதி: 

2023 ஜூன் 17ம் தேதி இரவு 10.33 மணிக்கு சதய நட்சத்திரத்தில் சனி வக்ர பெயர்ச்சி மேற்கொள்வார். 2023 அக்டோபர் 17 ஆம் தேதி சனி வக்ர நிலையில் அவிட்ட நட்சத்திரத்தில் நுழைவார். அதையடுத்து, 2023 நவம்பர் 04 ஆம் தேதி நண்பகல் 12:45 மணி முதல் சனி வக்ர நிவர்த்தி அடைந்து அவிட்ட நட்சத்திரத்தில் மீண்டும் நேர்கதியில் பெயர்ச்சியை தொடங்குவார். அதன்பிற்கு, 2023 நவம்பர் 22 ஆம் தேதி காலை 07.39 மணி முதல் சனி பகவான் கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்திற்கு மாறுவார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்