அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த தமிழ் புத்தாண்டு, ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய சிறப்பான மாதமாக அமைகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான் அமைந்துள்ளதால், உங்களுக்கு தொழிலில் சிறந்த பலன்கள் கிடைக்க உள்ளதாக அமையும். உங்களுடைய உழைப்புக்கேற்ப தொழில் சார்ந்த வருமானம் கிடைக்கும். எந்த அளவுக்கு கடுமையான முயற்சியில் ஈடுபடுகிறீர்களோ, அந்த அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை அடையப் போகும் காலமாக இந்த காலம் அமையும்.
வெளிநாட்டு வேலை, படிப்பு என எதிர்பார்த்து காத்துக் கொண்டவர்களுக்கு இந்த கால கட்டம் சிறந்த வாய்ப்பைத் தருவதாக அமைகிறது. உழைப்புக்கேற்ற வருமானம் இந்த வருடம் சிறப்பாக உள்ளது. இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி, பொருளாதார ரீதியாக எந்த சிக்கலும் இல்லாது வாழ்வீர்கள். சம்பள உயர்வு, வேலையில் பதவி உயர்வு என சிறப்பான காலகட்டமாக அமைகிறது. திருமண வரன் கிடைக்காத நபர்கள் அனைவருக்கும், வரன் கைகூடுவதுடன் சிறப்பான வாழ்க்கை அமையும்.
வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவது, நகை வாங்குவது உள்ளிட்ட அனைத்துமே நன்றாக நடக்கும். புதிய தொழில் தொடங்குதல், தொழில் சார்ந்த முதலீடுகள் வெற்றியைத் தருவதாக உள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கக் கூடியதாக அமைகிறது. சகல செல்வங்களையும் பெறப்போகும் கால கட்டமாக இந்த தமிழ் புத்தாண்டு அமையும். அதே நேரத்தில், செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையைப் பொருத்தவரை சற்று அதிகமான கவனத்துடன் செயல்படுவது சிறப்பைத் தரும்.
பரிகாரம்: இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது நன்மையைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…