Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Rasi Palan for Next Week:அடுத்த வாரம் அதிர்ஷ்ட பற்றிய தகவல் இந்த வாரமே! பண மழையில் திளைக்கப்போகும் அதிர்ஷ்டசாலி நீங்களா..! ஜூன் 12- 18 வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 10, 2022 & 17:00 [IST]
Rasi Palan for Next Week:அடுத்த வாரம் அதிர்ஷ்ட பற்றிய தகவல் இந்த வாரமே! பண மழையில் திளைக்கப்போகும் அதிர்ஷ்டசாலி நீங்களா..! ஜூன் 12- 18 வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வைகாசி மாதம் (ஜூன் 12 முதல் ஜூன் 18 வரை) வார ராசிபலனில் மேஷம்- கடகம் வரை (Rasi Palan for Next Week) தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண்போம்.

மேஷம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் வாரத்தின் முதற்பாதியில் பல நன்மைகளை அளிக்கும், முக்கியமாகக் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். அலங்கார சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் செல்வ வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர்  உடன் வெளியூர் பயணம் செய்வீர்கள். இந்த வாரம் பேச்சின் மூலம் சில பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். முக்கியமான பொருட்களை இழப்பீர்கள். உடல்நலத்தில் பெரிய தொல்லைகள் இருக்காது. மாணவர்கள் கல்வி நிலை ஓரளவு நன்றாக இருக்கும்.

 அஸ்வினி: பயணம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

பரணி:  நண்பர்களின் மூலம் கிடைக்கும் உதவி எதிர்பார்க்காத சந்தோஷத்தைத் தரும்.

கிருத்திகை: பல நாள் ஆசைகள் நிறைவேறும்

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் வேண்டும்.  

ரிஷபம்

பொது பலன்: உங்களுக்கு  இந்த வாரம் செலவு அதிகமாக இருந்தாலும், அதை சமாளிக்கும் அளவிலான பண தேவைகள் இருக்கும். தொழில் சுமை இந்த வாரம் மிகவும் அதிகமாக, அதிக நேரத்தை வேலையிலே செலவிடுவீர்கள். சில ரிஷப ராசிக்காரருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் அதிக கவனம் தேவை.மனம்  உறுதி அதிகமாக இருக்கும். பணி நிமர்த்தமாக் சிலர் வெகு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நட்பு வட்டாரத்திலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.குடும்ப வாழ்வு ஆனந்தமாக இருக்கும். மதிப்பு!

கிருத்திகை: சாதுரியமாக இருப்பீர்கள்

மிருக ஸீரிஷம்: மன உறுதியுடன் இருப்பீர்கள்.

ரோகிணி: பண தேவைகள் குறையும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: அம்மன் வழிபாடு     

மிதுனம்

பொது பலன்: சாதகமான கிரக நிலை இந்த வாரம் இருப்பதால் குடும்பம்,  தொழில், செல்வம் என அனைத்தும் சாதகமான  நிலையில் இருக்கும்.  தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை அளிக்கும், உங்கள் செல்வ நிலையை வழக்கத்தைவிட சற்று உயர்த்தும். மிதுன ராசி பெண்களுக்கு மிகவும் நன்றாக உள்ளது, எதிர்பாரா நன்மைகள் பல நடக்கும்.  குடும்பத்தின் நிம்மதி இருக்கும். நிலையான செல்வ வரவு இருப்பதால் இந்த வாரம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. 

மிருக ஸ்ரிஷம்: நண்பர்களின் உதவி மனதை ஆனந்தப்படுவதும்.

திருவாதிரை:  எதிர்பார்த்த செயல்கள் நடக்கும்.

புனர் பூசம்: சுப நிகழ்ச்சி நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது 

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்

கடகம்

பொது பலன்: உங்கள் யதார்த்தமான மனதுக்கு இந்த வாரம் வீட்டில் சந்தோஷம் அதிகமாக இருக்கும், ஆன்மீக ஸ்தலத்துக்கு செல்லுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தொழில் மாற்றத்தை எதிர்பார்த்த உங்களுக்கு இந்த வாரம் தொழிலில் சாதகமான மாற்றங்கள் நிகழும். தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. கல்வி நிலை அமோகமாக உள்ளது. குடும்ப வாழ்க்கையில் அக்கறை பிறக்கும், மகிழ்ச்சிக்குக் குறையில்லை. 

புனர் பூசம்: நிதி நிலை உயரும்.

பூசம்: நன்மைகள் நடக்கும்.

ஆயில்யம்: ஆலோசனைகள் பல கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ராக வேந்திரர்


Representative Image. மேலும் படிக்க: அடுத்த 4 ராசியின் (சிம்மம்- விருச்சிகம்) வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்