தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
வேலை மாற்றம், குடும்ப வறுமை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து வந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகப் பெரிய இராஜ யோகத்தை அள்ளித் தரக் கூடிய மாதமாக அமைகிறது. கல்வியில் பின் தங்கிய நபர்களுக்கு நினைவாற்றல் அதிகரிப்பதுடன், கல்வியில் சிறந்து விளங்குவர். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அடுத்த மூன்று வருட கால கட்டத்தில் சிறப்பான யோகங்கள் பெற போகும் காலமாக அமைகிறது. இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி, தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் கால கட்டமாக இந்த தை மாதம் அமையப் போகிறது.
மிகப்பெரிய யோகம் உடைய மாதமாகவும், சிறந்த துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெறக்கூடிய மாதம். இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு மிகப்பெரிய ராஜ யோகத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. உத்தியோகத்தில் சிறந்து செயல்பட்டு அதில் வெற்றியும் அடையும் நாள். இடம் மாறுதல்கள், உத்தியோக உயர்வு என அனைத்தும் நன்மைகளை உண்டாக்கும். இதுவரை திருமணம் ஆகாத நபர்கள், திருமணம் நடக்கும் மாதம்.
இந்த நேர கால கட்டத்தில் தொழில் மூலமாக லாபமும், வருமானமும் நன்றாக அமையும். தொழில் வளர்ச்சி லாபகரமானதாக அமையும். இந்த தை மாதம் முதல் சிறப்பானதாக அமையும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சியை வெற்றியைக் கொடுக்கும் நாள். இன்று உங்களுக்கு சாதகமான மாதமாக அமைகிறது. இது போல, எத்தனையோ நன்மைகள் கொடுத்தாலும், பூர்வீக சொத்து விஷயத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வது நன்மையைத் தரக்கூடியதாக அமையும். இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டமும், திடீர் பண வரவும் பெற்று சாதகமாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபட்டு வருவது சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…