தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் மகரம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த தை மாதமானது மகரம் ராசிக்காரர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் இருக்கும் காலமாக அமைந்துள்ளது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று சனி பகவான் பெயர்ச்சியாவதால் வளர்ச்சிக்கான காலம் ஆரம்பிக்கிறது. ஜென்ம சனியால் உங்களுக்கு நேர்ந்த கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் விலகும். மகரம் ராசிக்கு 2 ஆம் இடத்தில பாத திசை என்பதால் பிரச்சனைகள் குறையும். ஜனவரி 17 ஆம் தேதிக்கு பிறகு சனி பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் பயணிப்பதால் மகரம் ராசிக்காரர்கள் புது மனை, வீடு வாங்கும் அமைப்பு உருவாகும். வாக பயணத்தின் போது கூடுதல் கவனம் வேண்டும்.
தொழில் மற்றும் வேலை சார்ந்து இல்லாமல் மற்ற வகையில் புது முயற்சிகள் மேற்கொண்டால் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வைப்புகளை உங்களை வந்து சேரும். அதே போல், 4 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் ஒரு பதற்றமான மனநிலையில் இருப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சென்று விட்டதால் திருமணம் ஆகாத மகர ராசிக்காரர்களுக்கு வரும் ஜூன் 2023-க்குள் திருமண யோகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோநியம் அதிகரிக்கும்.
தனுஷ் ராசிக்காரர்களுக்கு 5 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் குடும்பத்தில் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் இருந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். இதுவே துக்க காரியம் நடைபெற்றிருந்தால் 3 மாதம் கழித்து செல்லுங்கள். வேலைவாய்ப்பு கை கூடி வரும், தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உடல் நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பரிகாரம்: மனதில் ஏற்படும் பதற்றங்களை நீக்க துர்க்கை மற்றும் ஆஞ்சிநேயரை வழிபடுங்கள். ஐயப்பனை வழிபட்டு வந்தால் உங்களை நெருங்கும் பிரச்சனைகள் அடியோடு நீங்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…