Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57
Exclusive

தை மாதத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், காதலர்களுக்கு ஆபத்து.. | Thai Month Rasi Palan 2023 Rishabam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தை மாதத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், காதலர்களுக்கு ஆபத்து.. | Thai Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image.

தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 

அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தை மாதத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், காதலர்களுக்கு ஆபத்து.. | Thai Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image

வாழ்க்கையை எதார்த்தமாகவும் மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளும் ரிஷப ராசியினரே. ராசி அதிபதியான சுக்கிர பகவான் வரும் தை 8 ஆம் தேதிக்கு பிறகு உங்க ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருந்து 10 வது இடத்துக்கு சஞ்சாரம் ஆவதால், அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களை அறியாமலேயே தெய்வீக ஈடுபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரைக்கும் நல்ல வேலையே இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தை மாதத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், காதலர்களுக்கு ஆபத்து.. | Thai Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image

மேலும் இந்த மாதத்தில் போட்டி தேர்வு எழுதும் ரிஷப ராசிக்காரர்கள் தேர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். தை 3 ஆம் தேதிக்கு பிறகு சமுதாயத்தில் புகழ், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, கண் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப கவனம் தேவை. பணஉதவி தாராளமாக கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். இருப்பினும், கூட்டு தொழில் செய்பவராக இருந்தால் உங்க கூட்டாளிக்கு தான் லாபம் அடைவார். திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். 

தை மாதத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், காதலர்களுக்கு ஆபத்து.. | Thai Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image

ரிஷப ராசியில் பிறந்த மாணவர்களுக்கு இந்த மாதம் யோகப் பலன்களை அள்ளிக்கொடுக்க கூடியதாக இருக்கும். பாஸ்போர்ட், வீசா அப்ளை செய்திருந்தால் கண்டிப்பாக கைக்கு கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக தொடங்கலாம். அற்புதமான மாதம். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி கிட்டும். குறிப்பாக, மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவு இருந்தாலும் செலவும் கூடவே இருக்கும். எனவே, சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். ஒரு சிலருக்கு காதல் பிரேக்கப் ஆகவும் வாய்ப்புள்ளது. காதலி/காதலனுடன் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். அதேபோல், உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கவனம் தேவை. 

பரிகாரம்: பெண் தெய்வ கோயில்களுக்கு நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கலாம். அல்லது வாரம் ஒருமுறையாவது அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர தொல்லைகள் அனைத்தும் விலகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்