தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த கால கட்டங்களில் கடனால் சிக்கித் தவித்த துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த தை மாதம் பண வருவாயைத் தரக்கூடிய மாதமாக அமையும். உடல்ரீதியான பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் என தொடர்ந்து வெவ்வேறு விதமாக பிரச்சனைகளைச் சந்தித்த துலாம் ராசிக்காரர்கள், இந்த மாதம் சுப காரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு. கடன்கள் அனைத்தும் நிவர்த்தியடைவதுடன், வருமானமும் ஈட்டுவதற்கான சிறப்பான காலமாக அமையும்.
வெளிநாட்டில் தொழிலில் இருப்பவர்களுக்கு, இராஜயோகம் தரக்கூடிய மாதம் ஆகும். புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இது உகந்த மாதம். தெளிவான சிந்தனையுடன், தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வ புண்ணிய அருள் கிடைக்கப் போகும் மாதம். வெகு நாள்களாக இருந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவாகி, மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முனைவால் லாபத்தை அதிகம் பெறுவீர்கள்.
வெளிநாட்டு பயணம் வெற்றியைத் தரும். தொழில்முனைவால் லாபத்தைப் பெறுவதற்கான உங்களின் முயற்சி வெற்றியைத் தரும். குடும்பம் சார்ந்த விஷயத்தில் மனநிறைவு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பணப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதுடன், அதிக வருமானம் ஈட்டுவதற்கான காலமாக அமைகிறது. இவை அனைத்தும் தொழில் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நன்மையை அளிக்கக் கூடியது. தொழிலில் நீங்கள் செய்யும் முயற்சியால், உங்களுக்கு யோகத்தை அளிக்கக் கூடிய மாதமாக அமைகிறது.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு உங்களுக்கு சிறப்பைத் தரும். பிரம்மா கோவில்களுக்குச் சென்று வழிபடுவது திருமண யோகத்தைத் தரக்கூடியதாக அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…