சனி பெயர்ச்சியால், ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர்களுக்கு உண்டான பலன்களை அடையப் போகிறார்கள். அந்த வகையில், இதுவரை நிதி நெருக்கடியில் இருந்த ராசிக்காரர்கள், பணத்தில் புரளும் வாய்ப்பும், அதே போல பணக்காரர்களாக இருந்தவர்களுக்கு பணக் கஷ்டமும் வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், சனிப்பெயர்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் பற்றிய விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.
நீதியின் கடவுளாக விளங்குபவர் சனி பகவான். முன் செய்த பாவங்கள் அனைத்தையும் இந்த ஜென்மத்திலேயே நம் பாவங்களை அகற்றி, நமக்கு பூரண அருள் புரிபவர் சனி பகவான் ஆவார். சனிப்பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனினும், சில பரிகாரங்கள் மூலம் சனி பகவான் கொடுக்கும் நெருக்கடியில் இருந்து விடுபடவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் சற்று கடினமாகத் தான் இருக்கும். தனுசு ராசிக்காரர்கள், பணியிடத்தில் பல்வேறு தடைகளையும், குழப்பங்களையும் சந்திப்பீர். அதே சமயம் செலவும் அதிகமாக இருக்கும். முதலீடு செய்வதாக இருப்பின், சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
யாரையும் கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது. எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் நலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: தனுசு ராசிக்காரர்களே! இந்தப் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
சனி பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதுவரை சேமித்து வைத்த பணத்தை செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனுடன், செலவுகள் அதிகரிக்கும். இதனால், உங்களின் மனநிலை மோசமான சூழ்நிலைக்கு மாறி விடும்.
இதனால், உடல் நலம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்படலாம். எதிர்பார்த்த நல்ல காரியங்கள் தள்ளிப்போகலாம். இதனால், ஏமாற்றம் அடையக் கூடும். இதனால், எதையும் எதிர்பார்க்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதே சமயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
பரிகாரம்: மேஷ ராசிக்காரர்கள் சந்திக்க போகும் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, சனி ஸ்தோத்திரத்தை தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
சனிப்பெயர்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகளில் சிம்ம ராசிக்காரர்களும் தான். இந்த கால கட்டத்தில் சனிபகவானின் பாதகமான பலன்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த ராசிக்காரர்கல் 2023 ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வார்கள். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அழுத்தமும், பதற்றமும் ஏற்படலாம்.
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இதனால், சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. குறிப்பாக ஆபத்தான வேலைகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: சிம்ம ராசிக்காரர்கள், சனிக்கிழமை தோறும் தேவையில் இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…