Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை...?

Manoj Krishnamoorthi November 02, 2022 & 06:00 [IST]
Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை...?Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் புதன்கிழமை (2.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் சில ராசிகள் நல்ல கோச்சார அடிப்படையில் நற்பலன்களை பெறுகிறது. இன்று 2.11.22 அன்று நிம்மதியாகவும் வாழ்வின் அடுத்த நிலைக்கு வளர்ச்சி கொள்ளும் அதிர்ஷ்டமான ராசிகள் எது என்று அறிய இந்த பதிவை பின்தொடரவும். 

 

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை...?Representative Image

இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் (Today Lucky Rasi)

சிம்மம் 

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பாராத மாற்றங்கள் பல பணியில் நடக்கும்.கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கணிசமான பண உயர்வு இருக்கும், சேமிக்க சரியான நேரமாக அமையும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகமாகும், வீட்டில் அனைவருடனும் சந்தோஷமான மனநிலையில் நடந்து கொள்ளுவீர். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. 

Most Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- சிம்மம் 

கன்னி 

இன்று வியாபாரிகளுக்கு புதிய முயற்சி செய்ய உகந்த நாளாகும், நல்ல லாபம் பார்க்க முடியும். புதிய மனிதரின் உதவி நல்ல பலன் அளிக்கும். அலுவலக பணியில் ஆர்வம் கூடும். உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும். காதலில் இனிமையான தகவல் கிடைக்கும். வீட்டில் நல்ல அணுகுமுறை உண்டு, குடும்பத்தினர் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- கன்னி 

தனுசு 

இன்றைய தினம் அதிர்ஷ்டமாக இருக்கும், நல்ல அறிவுரை கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். சக பணியாளரின் மதிப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அல்லது பரிசு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.  குடும்ப வாழ்வில் இனிமையான வார்த்தைகள் இருக்கும். சிலருக்கு சுப நிகழ்ச்சி அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தெளிவான மனநிலையால் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. 

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- தனுசு 

கும்பம்

இன்று வாழ்வின் அடுத்த நிலையை அடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும், சக பணியாளர் மூலம் நல்ல சகாயம் கிடைக்கும். அலுவலகத்தில் நல்லுறவு ஏற்படும்.  நிதி நிலையில் சிறிய தள்ளாட்டம் இருக்கும். குடும்பத்தில் புத்திசாலித்தனமாக பல முடிவுகள் எடுப்பீர். வீட்டில் மதிப்பு கூடும், முக்கிய பொறுப்பு உண்டாகும். 

Also Read: நவம்பர்  மாத ராசிபலன் 2022- கும்பம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்