இன்று சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் நாள் வியாழன் (3.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் சில ராசிகள் நல்ல கோச்சார அடிப்படையில் நற்பலன்களை பெறுகிறது. இன்று 3.11.22 அன்று நிம்மதியாகவும் வாழ்வின் அடுத்த நிலைக்கு வளர்ச்சி கொள்ளும் அதிர்ஷ்டமான ராசிகள் எது என்று அறிய இந்த பதிவை பின்தொடரவும்.
Most Read: நவம்பர் 3 2022, வியாழன்கிழமை தினத்தின் ராசிபலன்
நவம்பர் 3 அதிர்ஷ்ட ராசி
மிதுனம்
கடந்த சில நாட்களாக தொழிலில் இருந்த சருக்கல், இன்று தீர்வு கொள்ளும். அலுவலகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், சாதகமான முடிவு கிடைக்கும். நிதி நிலையில் கவனம் தேவை, முக்கியமான செலவு வரும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். உங்கள் குழப்பமான மனநிலை குடும்பத்தினர் மூலம் சரியாகும். கணவன் மனைவி உறவில் நல்ல அணுகுமுறை இருக்கும். உடலுக்கு ஓய்வு தேவைப்படும்.
Also Read: நவம்பர் மாத ராசிபலன் 2022- மிதுனம்
சிம்மம்
எண்ணிய காரியத்தில் செயலாக்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் அனைத்து பணிகளும் ஒற்றுமையாக நடக்கும். மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கும். பண வரவு உண்டு. இல்லற வாழ்க்கை இனிமையாக செல்லும், ஒருவருக்கு ஒருவர் அன்பாக நடந்து கொள்ளுவீர். நண்பர்கள் மூலம் புதிய திட்டங்களை முயற்சி செய்ய முடியும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
Also Read: நவம்பர் மாத ராசிபலன் 2022- சிம்மம்
தனுசு
உங்களின் நேர்மையான அணுகுமுறை தொழிலில் மதிக்கப்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு உண்டாகும். செல்வ நிலை உயரும், எதிர்பாராத பண வரவு உண்டு.குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்வில் புரிதல் உண்டாகும். வாழ்க்கை துணையின் மனதை அறிந்து நடப்பீர். மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான உடல்நலம் இருக்கும்.
Also Read: நவம்பர் மாத ராசிபலன் 2022- தனுசு
மகரம்
வியாபாரம் எந்த இடையூறும் இல்லாமல் சுமுகமாக நடக்கும். பணியிடத்தில் சக பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் வேலை நேரம் அதிகமாகும். செல்வ நிலையில் நிதானம் தேவை. இன்பமான குடும்ப வாழ்க்கை அமையும், உங்களின் முக்கியத்துவம் அதிகமாகும். வீட்டில் முக்கிய முடிவுகள் எடுப்பீர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Also Read: நவம்பர் மாத ராசிபலன் 2022- மகரம்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…