Today Rasi Palan in Tamil | Tomorrow Rasi Palan | Nalaiya Rasi Palan | Inraiya Raasi Palan
நல்ல நேரம்:
காலை: 06.30 - 07.30 வரை
மாலை: 04.30 - 05.30 வரை
மேஷம் | Aries 2022 Horoscope
மேஷ ராசிகாரர்களே! இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டில் சுப காரியம் நடைபெறும். உங்களீல் சிலர் வீட்டு உபயோக பொருள் அல்லது நகை வாங்குவீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணிசுமை அதிகமாக காணப்படும். திறமையுடன் செயல்பட வேண்டும். ஆபிஸ் கோபத்தை வீட்டில் காண்பிப்பீர்கள். இதனால், உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். செலவு!
ரிஷபம் | Taurus 2022 Horoscope
இன்று சங்கடமான நாளாக இருக்கிறது. விரும்பியது கிடைக்காது. ஆனால், அதற்காக மனம் தளர வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள் நற்பலன்கள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் அளவிற்கு நடந்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்க வேண்டும். உங்களுடைய கவலைகளை உங்கள் துணையுடன் ஷேர் செய்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இல்லாததால், சங்கடமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் அதிக வேண்டும். உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகி விடுவீர்கள். ஏமாற்றம்!
மிதுனம் | Gemini 2022 Horoscope
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய ஆசை அனைத்து நிறைவேறும் நாள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய பணியை பாராட்டுவார்கள். மதுவை தவிர்ப்பது நல்லது. அதிக பழக்கம் இல்லாதவர்களிடம் பழக்கத்தை தவிர்க்கவும். இன்று உங்களுடைய மனைவியிடம் அன்பு பாராட்டுவீர்கள். இதனால், காதல் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கிறது. வெற்றி!
கடகம் | Cancer 2022 Horoscope
சில சிக்கலான சூழல் ஏற்படும். பொறுமை மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் திரும்பவரும். பணிச்சுமை மிகுந்து காணப்படும், மற்றவர்களின் உதவியும் கிடைக்காது. அது உங்களை டென்ஷன் ஆக்கலாம். இந்த டென்ஷனை வீட்டில் கொண்டுபோய் கொட்டிவிட வேண்டாம். பெரிய சண்டை வர வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சுமாராக இருக்கும். ஓய்வெடுப்பது நல்லது. ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள். கவனம்!
சிம்மம் | Leo 2022 Horoscope
நீங்க கடன் வாங்கியவர்கள் வீடு தேடி வந்து பணம் கேட்பார்கள். மனதில் குழப்பங்கள் காணப்படும். துணையுடன் கவனமாக பேச வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனைவரும் உங்களுடைய சொல்லை கேட்டு நடப்பார்கள். உங்களுடைய கணவர் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் உதவி புரிவார். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆகமொத்தத்தில், இன்று சுமாரான நாள் என்றே சொல்லலாம். நலம்!
கன்னி | Virgo 2022 Horoscope
சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் சிறப்பாகவே உள்ளது. எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கது. பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். திருமண வாழ்க்கையில், இன்று போல் என்றுமே இந்த அளவுக்கு இனிமையாக இருந்திருக்காது. உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இருவருக்கும் இடையில் ஆனந்தமும் அன்பும் பொங்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. அதிக தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். நிதானம்!
துலாம் | Libra 2022 Horoscope
பணம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரும். காதலில் ஏமாற்றம் வரலாம். அதற்காக மனம் தளர வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எப்போதும் டென்ஷன் நிறைந்தே இருக்கும் எனவே, வேலையை மாற்றுவது மன நிம்மதியை கொடுக்கலாம். புதிய முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நம்பிக்கை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். அன்பு பெருகும். நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டமான நாள். கையில் பணம் விளையாடும். அதை நல்ல விதமாக பயன்படுத்தினால், நன்மை. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அன்பு!
விருச்சிகம் | Scorpio 2022 Horoscope
வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகள் வழியில் உங்களுக்கு பெருமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்தி கொள்வீர்கள். பணிவான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். வீட்டு வேலை களைப்படையச் செய்யும். பணிபுரியும் இடத்தில் இத்தன நாட்களாக யாருகிட்ட பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ரொமான்ஸுக்கு பஞ்சம் இருக்காது. வருமானம் எதிர்பாரா சந்தோசத்தை அள்ளி கொடுக்கும். துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இதனால், அவர்களின் மீதான காதல் இரட்டிப்பாகும். சிறப்பு!
தனுசு | Sagittarius 2022 Horoscope
பல சவால்களை சந்திக்க தயார இருந்துக் கொள்ளுங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். அவரின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். இன்று வீண் செலவுகள் வரும், பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். இன்று ஓய்வு என்பதே கிடைக்காது. அதுவே வெறுப்பை உண்டாகும். அலைச்சல்!
மகரம் | Capricorn 2022 Horoscope
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இன்று மனதில் பல விஷயங்கள் வந்து வந்து போகும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். பணி சம்பந்தமான பயணம் காணப்படும். இதனால் சோர்வடைவீர்கள். உங்களுடைய வீண் பேச்சால், உங்கள் துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படலாம். நிதிநிலைமை பலன் தரும் வகையில் இருக்காது. முற்காலத்தில் செய்த செலவுகளை நினைத்து ஃபீல் பண்ணுவீங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தனை!
கும்பம் | Aquarius 2022 Horoscope
உங்களுடைய இலக்குகளை அடைவீர்கள். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால், அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் துணையுடன் மனம் திருந்து பேசுவீர்கள். அவரும் உங்களை புரிந்துக் கொள்வார். பேசும் விதத்தில் பேச வேண்டும். கடின உழைப்பிற்கு சரியான பரிசு கிடைக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்கு ரொமாண்டிக்கான நாள். பரிசு!
மீனம் | Pisces 2022 Horoscope
சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். உங்கள் கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் - அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். உங்களை அடைந்ததில் உங்கள் துணை பெருமிதம் கொள்வார். அதனை இன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். சுறுசுறுப்பு!
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…