Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan: இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர் நீங்களா! ஜூன் 5, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 04, 2022 & 17:45 [IST]
Tomorrow Rasi Palan: இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர் நீங்களா! ஜூன் 5, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

Tomorrow Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

தெளிவான சிந்தனையும் திடமான தன்னம்பிக்கையும் இன்று உங்களுக்கு அதிகமாகத் தேவைப்படும், வீட்டில் அமைதியான நிலைமை நீடிக்க பொறுமையாக இருக்க வேண்டும். திடீரென உறவினர் வருகை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அதிகமான பொறுப்புகள் உருவாகும். அலுவலக இன்று வேலைகள் அதிகமாக இருக்கும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம்.. செல்வ நிலையில் பண வரவு அதிகமாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் உருவாகும், மருத்துவ செலவு இருக்கும். இன்று மாணவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடும், கவனமாக படிக்க வேண்டும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

அன்பான அணுகுமுறையால் பிறரின் மனதைப் புரிந்து கொள்ளும் உங்களுக்கு இன்று சாதகமான நாளாகும், கல்வி நிலை அமோகமாக உள்ளது. அலுவலகத்தில் மிகவும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலை திருப்டிகரமாக உள்ளது. ஆரோக்கியத்தில் சிறப்பாக உள்ளது. வீட்டில் நல்ல உறவு இருக்கும்.  காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், காதலர்களுள் புரிதல் அதிகமாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அமைதியான மனநிலையால் பிறரின் நட்பை எளிதில் பெறும் மிதுன ராசிக்காரரே இன்று தொழில் மிகவும் நன்றாக இருக்கிறது. இதுவரை இருந்த நிதி நெருக்கடி இனி குறையும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், ஆரோக்கியத்தில் சிறிய கவனம் அவசியமாகும். இன்று திடீர் பயணம் கொள்ளும் யோகம் அதிகமாக உள்ளது. கணவன் மனைவி உறவில் நல்ல இலக்கணம் உருவாகும், ஒற்றுமை அதிகமாகும். குடும்ப செலவுகள் இருக்கும். இன்று மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அமைதி இன்று உங்களுக்கு கிடைக்கும், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவரின் உதவி அதிகமாகக் கிடைப்பதால் இன்று உங்களுக்கு வேலைச் சுமை குறைவாகும். இன்று அமைதியான மனநிலை அதிகமாக இருப்பதால் புதிய யோசனைகள் பல பிறக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மகிழ்ச்சியான மனநிலை நிலவும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

தேர்ந்தேடுத்த முடிவிலிருந்து சற்றும் விலகாத மன உறுதி கொண்ட    சிம்ம ராசிக்காரரே இன்று வெறுப்பான சூழ்நிலைகள் பலத்தோன்றும். அலுவலக வேலையின் காரணமாக மனம் கொஞ்சம் சோர்வாகும், வேலைச் சுமை அதிகமாக இருக்கும். உங்கள் அன்பான குணத்தால் குடும்பத்தில் அமைதியான நிலைமை உருவாகும். திடீர் பணவரவு மனதை  நிம்மதியாக்கும். ஆரோக்கியம் மிகவும் நன்றாக உள்ளது. கல்வியில் நன்கு படிக்க உகந்த சூழ்நிலைகள் அமையும், பாராட்டு கிடைக்கும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

வெளிப்படையாக பேசும் வெகுளியான மனதைக் கொண்ட கன்னி ராசிக்காரரே இன்று உங்கள் ராசியில் இதுவரை இருந்த தேவையில்லாத எண்ணங்கள் மறைந்து தெளிவான சிந்தனையைத் தருவார். ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. செலவு இருக்கும், ஆனால் கையில் பணம் இருப்பதாக உண்வீர்கள். குடும்ப செலவுகளைக் குறைக்க அதிகம் முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் மூலம் சண்டைகள் வளரும். தொழிலில் கடினமான உழைப்பு நல்ல ரிசல்ட் தரும். விடா முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் (Libra 2022 Horoscope)

அசாதாரணமான முடிவுகளை எடுக்கத் தயங்காத உங்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உங்கள் இலக்கில் வெற்றி காண்பீர்கள். மிகவும் லாபகரமான நாளாகும், உருவாகும் தடங்களைச் சரி செய்யும் யுத்தி உங்களுக்கு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.  உத்தியோகத்தில் இருப்பவருக்கு அலுவலகத்தில் நல்ல சூழல் இருக்கும்.  காதல் வாழ்க்கையில் சில சந்தேகம் இருக்கும், குடும்பத்தில் வாக்குவாதம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அனைவரிடமும் அன்பாக நடக்கும் உங்களுக்கு இதுவரை தொழிலில் இருந்த சிரமங்கள் நீங்கி இன்று சுறுசுறுப்பாக வேலை செய்யத் தூண்டும் மேலும் செய்யும் முயற்சி நல்ல பலன் அளித்து புகழைச் சேர்க்கும். அவ்வப்பபோது தொழிலில் உருவாகும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். இன்று உங்களின் மனம் மற்றும் உடல் இரண்டுமே ஒருநிலை செயல்பட்டு தேவையான சக்தி அளிக்கும். குடும்பத்தில் இன்பமான சூழல் அதிகமாகும். கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். மேன்மை!  

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius 2022 Horoscope)

எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வரை அயராது போராடும் தனுசு ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்குப்  பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மனம் நிறைவாக இருக்கும், நிதி நிலைமை ஓரளவு நன்றாக இருக்கும், செலவை கட்டுபடுத்த வேண்டும். வீட்டில் இன்று முழுவதும் நிம்மதியாக இருப்பீர்கள். பணியிடத்தில் வேலையின் போது சிறு தவறுகள் ஏற்படும், ஆரோக்கியம் மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் குடும்ப நபருக்கு சிறிய மருத்துவ செலவு உருவாகும். மாணவர்களின் கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Capricorn 2022 Horoscope)

வயதில்  மூத்தவருக்கு மரியாதைக் கொடுப்பதில் அக்கறை கொண்ட மகர ராசிக்காரரே இன்று நிதி நிலை போதுமான அளவு நன்றாக இருக்கும். வீட்டில் பிரச்சனை ஏதுமிருக்காது. பணியில் இன்று முக்கிய முடிவுகள் பலவற்றைக் கவனமாக எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் அமைதியாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஓய்வு நேரம் குறையும். அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

சந்தோஷமான சூழலை அனைவருக்கும் உருவாக்கும் உங்களுக்கு இன்று ஓரளவு நன்மைகள் மட்டுமே நடக்கும். பயணத்தின்போது அமைதியாக இருங்கள் தேவையில்லாத வாக்குவாதம் உருவாகும். இன்று உங்களின் தொழில் ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது, வேலையின் காரணமாகப் பயணம் செய்யும் காரணம் உருவாகும். உங்கள் திறமை பணியில் முன்னேற்றப் பாதிஅயில் அழைத்து செல்லும். செல்வம் கையில் கொஞ்சம் குறைவாக இருக்கும்.  உடல்நலம் நன்றாக உள்ளது. தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:4 

மீனம்(Pisces 2022 Horoscope)

காதல் எண்ணம் அதிகம் கொண்ட மீன ராசிக்காரரே இன்று உங்களின் ராசிக்கு சாதகமான பலன் கள் பல நிகழும், ஆனால் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். இனிமையான அணுகுமுறை காதல் வாழ்க்கையில் புதிய உறவை உருவாக்கும். கையில் பணப் புழக்கம் குறைவாகக் காணப்படும். இன்று கணவன் மனைவி உறவில் எந்த பிரச்சனையும் வராது. ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. உத்தியோகத்தில் இன்று பாராட்டு கிடைக்கும், மேலதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள், உங்கள் செல்வாக்கு அதிகமாகும். நிம்மதியான உறக்கம் வரும். கல்வி நிலை மிகவும் நன்றாக இருக்கும். நேர்மை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்