Thu ,Jul 18, 2024

சென்செக்ஸ் 80,716.55
51.69sensex(0.06%)
நிஃப்டி24,613.00
26.30sensex(0.11%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - வியாழன் | Tomorrow Rasi Palan in Tamil | 29.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
நாளைய ராசிபலன் - வியாழன் | Tomorrow Rasi Palan in Tamil | 29.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 14 ஆம் நாளுக்கான [29 ஜூன் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் பனிச்சுமை அதிகமாக இருக்கும், கவனத்தோடு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டால் பிரச்சனை வரலாம். பயணங்களின் போது பணத்தின்மீது கவனம் தேவை. சில முக்கிய பணிகளில் தடை, தாமதம் ஏற்படும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, வாகன பயணத்தில் எச்சரிக்கை வேண்டும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபாரத்தில் லாபத்தை ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் முடிவடையும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. நிதிநிலைமை தாராளமாகவே உள்ளது. கடனாக கொடுத்த பண திடீரென வசூலாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒரு உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. துணையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பணியிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் இருந்த பிரச்சனை தீர்ந்து, ஒன்று சேர்வீர்கள். வீம்பாக இருந்த குடும்பத்தினர் தானாகவே வந்து உங்களிடம் பேசுவார்கள். எதிர்பாலினத்தவரால் நன்மை ஏற்படும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். பணியிடத்தில் சரியான நேரத்தில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடத்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் மனதில் கவலை தோன்றி மறையும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கன்னி | Nalaya Rasi Palan Kanni

ஏமாற்றம் மிகுந்த நாள். அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பணியிடத்தில் பணிசுமை அதிகமாக இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். மனைவிவழி உறவினர்களிடம் பார்த்து நடந்துக்கொள்ளவும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் | Nalaya Rasi Palan Thulam

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன் வழி பந்தங்களால் ஆதாயம் ஏற்படும். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். ஒருசிலருக்கு புது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நேர்மறையான அணுகுமுறை மூலம் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரம் சார்ந்த பேச்சு எழும். நீர்நிலைகளுக்கு செலவதை தவிர்க்கவும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். மனம் திறந்து பேசுங்கள். வரவு செலவு இரண்டும் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எண்ணத்தில் தெளிவு வேண்டும். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமான தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் கவனம் தேவை. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். சகபணியாளர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. புதிய நபர்களுக்கு எதிர்பாராமல் உதவி செய்வீர்கள். இரவு பயணத்தை தவிர்க்கவும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் | Nalaya Rasi Palan Meenam

விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்வது நல்லது. சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அச்ரவணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாரா பணவரவுக்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். காதலர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். தீரம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்