Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அவசரப்பட்டு பேசினால் வீண் வில்லங்கத்தில் சிக்குவீர்கள்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Kumbam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அவசரப்பட்டு பேசினால் வீண் வில்லங்கத்தில் சிக்குவீர்கள்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 கும்பம்:

நீண்ட நாட்களாக இழுத்தடித்த வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலான மாதம் என்றே சொல்லலாம். எதிர்பாரா பணவரவு பல நெருக்கடிகளை நீக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் தரக்கூடிய மாதமாக இருக்கும். புது மனை, வீடு, வண்டி, வாகனம் வாங்குவது, விற்பது இரண்டுமே நடக்கும். மாணவ, மாணவிகளுக்கு சாதமான மாதம். 

சூரியனின் சஞ்சாரத்தால் சில காரியங்களில் தாயின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். தொட்டது துலங்கும். இருப்பினும், புதிய நபர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம். எடுத்தோம் கவுத்தோம் என்று வாயை கொடுத்தால் வீண் வில்லங்கத்தை சந்திக்க நேரிடும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்துக் கொள்வது பெரிய பிரச்சனையை தடுக்கும். கணவனின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்