Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

பண இழப்பு ஏற்படும்.. எச்சரிக்கையோடு இருங்க.. | Vaikasi Matha Rasi Palan 2023 Meenam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பண இழப்பு ஏற்படும்.. எச்சரிக்கையோடு இருங்க.. | Vaikasi Matha Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் மீன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 மீனம்:

அரசியல்வாதிகளுக்கு யோகம் ஒருபக்கம் இருந்தாலும், வாகனம் மற்றும் பெண்களால் பிரச்சனைகள் வரும் கவனம் தேவை. மேலும், இந்த செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கையால் மீன ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு உடல்நல கோளாறுகள் வரும். முன்கோபம், அவசர புத்தியால் அவ்வப்போது சிக்கல்கள் தோன்றி மறையும். சூதானமாக இருந்துக் கொள்வதோடு கோபத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது. அதேபோல், குடும்பத்தினரிடம் பேசும்போது வார்த்தையில் கவனத்தோடு இருக்கவும்.

எந்த முக்கிய பணிகளில் ஈடுபடும் முன்னரும் நிதானம், பொறுமை அவசியம். மாமனார் வழியில் ஆதாயம் ஏற்படும். ஏழரை சனி தாக்கத்தால் ஒரு சிலர் பணத்தை இழக்க கூடிய சூழல் வரலாம். எனவே பண விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும். குழந்தை வரனுக்காக காத்திருக்கும் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. காதல் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் வரும். இக்கட்டான சூழலில் சகோதரர்களின் ஆதரவு கூடும். சிலர் தொலைத்தூர பயணங்கள் மூலமாக அனுகூல பயன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்