வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதம் யோகம் தரக்கூடிய மாதமாக அமைகிறது. மேஷ ராசிக்காரர்களின் லக்னமாக அமையக் கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமைய உள்ளார். இதனால், நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். குழந்தைகளினால் வரவு மேம்படும். குழந்தைகளின் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். கலை சார்ந்த துறையில் அருமையான வரவு கிடைக்கும்.
சுக்கிரன், செவ்வாய் இரண்டும் இணைந்து 4 ஆம் இடத்தில் இருப்பது நன்மையைத் தரும். இதன் மூலம் தட்டிக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாழ்வில் மேன்மை அடைவதற்கான வழியைத் தேடுவீர்கள். இருப்பினும், வீட்டில் உறவினர்களிடையே பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகம் கோபப்படும் சூழ்நிலை ஏற்படலாம். எனவே, பொறுமையாகச் செயல்படுவது நல்லது. சொந்த ஊருக்குத் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான நிலை உண்டாகும். உடல் சார்ந்த பிரச்சனகளைத் தீவிரமாக கவனித்துக் கொள்வது நல்லது. அதே சமயம், இந்த மாதம் பொருள் சேர்ப்பதற்கான நல்ல சூழலாக அமையும். புதிய வேலை கிடைக்கும்.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டி வணங்குவோர்களுக்கு அற்புதமான நிலை உண்டாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…