Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா கஷ்டம் தான் | Vaikasi Matha Rasi Palan 2023 Thulam in Tamil

Priyanka Hochumin Updated:
இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா கஷ்டம் தான் | Vaikasi Matha Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 துலாம்:

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும். பீபி, கொலஸ்ட்ரால், சுகர் இருப்பவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து செயல்பட வேண்டும். வண்டி வாகனங்களில் பிரயாணம் செய்யும் போது ஆவணங்களை சரியாக எடுத்துச் செல்ல வேண்டும்.

அரசு, கல், மனை, கட்டுமான, ரசாயனம் சார்ந்த தொழில்கள் மிக அமோகமாக இருக்கும். உங்களின் பெண் குழந்தை துலாம் ராசியாக இருந்தால் நல்ல ஏற்றம் உண்டு. அதே போல நீங்கள் எதிர்பாத்த வேலை கிடைக்கும். கடல் கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. காசு விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல பலனை அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்