Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image.

ஜோதிடம் மனித வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜோதிட கணிப்புகளின் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கப்போவதை முழுமையாக கூறமுடியாது என்றாலும், அதற்கான சாத்தியகூறுகளை வரையறுக்க முடியும். அந்தவகையில், இந்த காதலர் தினம் உங்க ராசிப்படி என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்!

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

மேஷம்

அதிகாரம் ஆளுமைமிக்க மேஷ ராசியினருக்கு இந்த காதலர் தினம் கலவையான பலனை கொடுக்கும். ஏற்கனவே காதலித்துக் கொண்டிருந்தால், நீங்க உங்க துணையுடன் அதிகமான நேரத்தை செலவிடுவீர்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் பாலியல் நெருக்கம் உருவாகும். ஒருதலையாக காதலித்து வந்தவர்கள் லவ்வரிடம் சென்று உங்க காதலை சொல்வீர்கள். முதலில் மறுப்பு உருவாகி அடுத்ததாக வெற்றி கிடைக்கும். 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

ரிஷபம்

நீண்ட நாட்களாக உங்க காதலை சொல்ல தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு அற்புதமான நாள். நட்சத்திரங்களின் சீரமைப்பு உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தைரியமாக சென்று உங்க காதலை சொல்லுங்கள். கண்டிப்பாக கிரீன் சிக்னல் கிடைக்கும். ஏற்கனவே, காதலித்துக்கொண்டிருக்கும் ரிஷப ராசியினருக்கு காதலின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு அமையும். பெற்றோர்களிடம் உங்க காதலை சொல்ல சரியான நேரம் வந்தாச்சு!

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

மிதுனம்

பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதலித்த பெண்/ஆணை திருமணம் செய்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். புதியதாக காதலிப்பதாக இருந்தால், நண்பர்களால் தடங்கல் ஏற்படும். எனவே, பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயம் சம்மதம் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம், அரவணைப்பு அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களே காதலர்களாக மாறவும் வாய்ப்புள்ளது.

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

கடகம்

நீங்க காதலித்த பெண் அல்லது ஆணை மற்றொருவருக்கு சம்மதம் தெரிவிக்கும் சூழல் ஏற்படும். எனவே, முடிந்த அளவிற்கு நேரத்தை கடத்தாமல் உடனே மனதில் இருப்பதை லவ்வரிடம் சொல்லிவிடுவது சிறந்தது. ஏற்கனவே காதலில் இருக்கும் கடக ராசியினர் தனது துணையுடன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பிரிந்த கணவன், மனைவி ஒன்றுசேர வாய்ப்பு கிடைக்கும். 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

சிம்மம்

திருமண வயதில் இருக்கும் சிம்ம ராசியினருக்கு புதிய காதல் துணை கிடைப்பார்கள். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் உங்க லவ்வரை உங்க குடும்பத்தினருடன் அறிமுகம் செய்ய சரியான தருணம். ஒருதலையாக காதலித்த சிம்மம் ராசியினர் சமீபத்தில் உங்க லவ்வரின் பதிலுக்காக காத்திருந்தால் கிரீன் சிக்னல் கிடைக்கும். சிலருக்கு நெருங்கிய நண்பரே புரோபோஸ் செய்வார்கள்.

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

கன்னி

காதலில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் துணையுடனான உங்கள் தொடர்பு வலுவடைந்து, வாழ்க்கையில் ஒரு புதிய மறுதொடக்கத்தைக் காண்பீர்கள். 90ஸ் கிட்ஸாக இருந்தால் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. நீங்களே எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதாவது, உங்களை ஒருவர் வந்து புரப்போஸ் செய்வார்கள். 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

துலாம்

துலாம் ராசியினர் தனது நெருங்கிய நண்பரையே காதலிப்பீர்கள். அதை நாளைய தினம் உணர்வீர்கள். ஆனால், அதை அவரிடம் நேரடியாக சொல்ல தயக்கம் காட்டுவீர்கள். அதுவே உங்களுக்கு ஆப்பாக மாறிவிடும். எனவே, சற்றும் தாமதிக்காமல் மனதில் இருப்பதை கொட்டி தீர்த்துவிடுங்கள். இல்லையென்றால் பழம் கைநழுவிவிடும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு துணையிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

விருச்சிகம்

ஆழமான உரையாடல்கள், காதல் நிறைந்த தருணங்கள் மற்றும் மனதைக் கவரும் உடலுறவுக்கானத் தருணங்களை கிரக நிலைகளை உங்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளன. காதலில் இருக்கும் இருவரில் ஒருவர் எடுக்கப்போகும் முயற்சியால், இந்த காதலர் தினம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒருதலையாக காதலிப்பவர்கள் தைரியமாக மனதில் இருப்பதை உங்க லவ்வரிடம் சொல்லலாம்.

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

தனுசு

நீங்க காதலிப்பவரை மற்றொருவர் புரொப்போஸ் செய்ய வாய்ப்புள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிக்கும். சிலருக்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதாவது காதல் உறவில் இருந்து அடுத்த மைல்கல்லை எட்ட திட்டமிடுவார்கள். அதாவது, காதலை வீட்டில் சொல்வது, திருமணம் செய்துக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். பழைய காதல் வாழ்க்கையை நினைத்து கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்துவேறுபாடு எழ வாய்ப்புள்ளது. 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

மகரம்

காதலருடன் வெளியில் சென்றுவருவீர்கள். உங்க காதல் உறவு உங்க வீட்டு பெரியவர்களுக்கு தெரிய வரும். ஆனால், அவர்களும் ஒற்றுக்கொள்வார்கள். இதனால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பீர்கள். சேரவே முடியாது என்று இருந்த காதலர்கள் ஒரு புதிய நபரின் உதவியால் மீண்டும் இணைவீர்கள். சிலருக்கு பிடித்த துணையை கரம் பிடிப்பீர்கள். 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

கும்பம்

வீட்டில் சொல்ல நினைத்த காதல் விஷயத்தை அவர்களே தெரிந்துக் கொண்டு, உங்க காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் இந்த காதலர் தினத்தில் வெற்றியை அடைவீர்கள். உங்க லவ்வரிடம் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். நீண்ட நாட்கள் கழித்து தனது காதலன்/காதலியை சந்திப்பீர்கள். காதல் திருமணம் செய்த கும்ப ராசியினருக்கு சிறப்பான நாள். 

இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏற்றமா? ஏமாற்றமா? | Valentine's Day 2023 Rasi Palan in Tamil Representative Image

மீனம்

மீன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத வகையில் உங்கள் துணை உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள். ஒருதலையாக காதலிப்பவர்களுக்கு முதலில் மறுப்பு ஏற்பட்டு பிறகு கமிட்டாகும். காதல் உறவில் இருப்பவர்கள் உங்க காதலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தால் இது நல்ல நேரம் கிடையாது. பொறுமைக் காக்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்