Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!

Manoj Krishnamoorthi November 21, 2022 & 16:30 [IST]
Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image.

வீடு நம்மில் பல பேரின் கனவு, வாழ்நாள் லட்சியம் என சொல்லாம். அதற்கு காரணம் நமக்கான தனி இடம் என்றாலே எப்போதும் தனி மகத்துவம் தான். வீடு கட்டும்போது நாம் கவனமாக ஒவ்வொரு முடிவும் யோசித்து பல முறை ஆராய்ந்து எடுப்போம் ஆனாலும் சில சமயம் அது கட்டுமான தவறாக இல்லாமல் வாஸ்து சாஸ்திர தவறாக மாறிடும். இப்படி நடக்கும் வாஸ்து சாஸ்திர கோளாறுகள் கண்டு பயப்பட வேண்டாம்.... ஒருவேளை  நம் வாழ்நாள் வீட்டில் இப்படி நடந்தால் என்ன வேண்டும் எந்த பரிகாரம் (Vastu Pariharam) சரியான தீர்வு என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image

நம் புவி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இந்த ஐந்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் ஒன்று இல்லை என்றாலும் மானுட வாழ்க்கை அச்சு முறிந்த சக்கரம் போல தான். 

ஒரு வண்டிக்கு இரு சக்கரம் என்பதுபோல் மற்றொரு அடிப்படை எட்டு திசைகள் ஆகும். இந்த 8 திசைகளுக்கு தனித்தனி சிறப்பு உண்டு, இதை மையமாகக் கொண்டு தான் வாஸ்து சாஸ்திரம் செயல்படுகிறது. 

பண்டைய கால கட்டிடம் முதல் நவீன கட்டிட கலை வரை நம் கட்டுமானத்தின் அடிப்படையில் விஞ்ஞானமாகவும் இந்த வாஸ்து உள்ளது. இருப்பினும் நம்மை அறியாமல்  சில தவறுகள் நடக்கும், அது வாஸ்து தோஷமாக மாறிவிடுகிறது. அந்த வாஸ்து தோஷத்தை போக்கும் பரிகாரம்  (Vastu Pariharam In Tamil) கொடுக்கப்பட்டுள்ளது. 

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image

பொதுவாக வீட்டின் வடகிழக்கு திசை சுத்தமாக இருக்க வேண்டும், அது லட்சுமி தேவி பிரவேசிக்கும் திசை ஆகும். ஒருவேளை நம் வீட்டில் இந்த திசையில் படுக்கை அறை இருந்தால் அங்கு உறங்குவதைத் தவிர்த்து விடுங்கள். முக்கியமாக அந்த அறையை எப்போது சுத்தமாகவும் வெளிச்சம் வரும் வகையிலும் வைப்பது நன்மை ஆகும். 

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image

நாம் வீடு கடி நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் முதலில் பொருளாதாரச் பிரச்சனை இருக்கக் கூடாது அல்லவா...! ஆம், அதற்கு நம் வீட்டில் இருக்கும் நீர் குலைகள் மற்றும் நீர் நிரப்பும் பாத்திரங்கள் பழுதடைந்து இருந்தால் உடனடியாக மாற்றுங்கள். அது பொருளாதாரச் நெருக்கடியை அதிகப்படுத்தும் என்பது நம்பிக்கை ஆகும். 

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image

விநாயகர் சிலை (Vastu Vinayagar)

வினைகளைத் தீர்க்கும் கணேசன் இருக்கையில் எதற்கு கவலை, ஆம் நம் வீட்டில் வெளிப்புறத்தில் ஏதாவது வாஸ்து குறை இருந்தால் வீட்டை பார்த்தவாறு ஒரு விநாயகர் சிலை வைக்க வேண்டும். ஒருவேளை நாம் இருப்பது வாடகை வீடு என்றாலோ அல்லது வீட்டில் வெளிப்புறத்தில் இடம் பற்றக்குறை என்றால் வீட்டின் வெளிப்புற சுவற்றில் விநாயகர் படத்தை மாற்றி வைக்கலாம். 

Vastu Pariharam : வாஸ்து தோஷம் நிவர்த்தியாக செய்ய வேண்டிய பரிகாரம்...!Representative Image

வாஸ்து தோஷ நிவர்த்தி பரிகாரம் (Vastu Dosha Pariharam In Tamil)

நாம் மேலே குறிப்பிட்ட குறைகள் அல்லாது வேறு வாஸ்து தோஷ இருந்தால் நாம் வாஸ்து பகவானுக்கு உரிய நாளில் தோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை அனைவரும் எளிதில் செய்யலாம்.

நம் வீட்டை சுத்தப்படுத்தி பூஜைக்கு நைவேத்தியம் படைத்து சில எலுமிச்சை பழங்களை வைத்து கொள்ளுங்கள். வழக்கம்போல் தீபாரதனை செய்து சாம்பிராணி கொண்டு தூபம் காட்டி கொள்ளவும். பின்னர் நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தைக் காக்கைக்கு படைத்து விடுங்கள்.  பூஜையில் வைத்த எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி குங்குமம் தடவி  வீட்டின் நிலவிற்கு அருகில் வைக்க வேண்டும்.  இறுதியாக  உச்சி நேரத்தில் அல்லது இரவில் எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி சுற்றி வீட்டின் நான்கு திசையிலும் போட வேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு வாஸ்து தினத்திலும் இந்த பரிகாரம்  (Vastu Pariharam) செய்து வர நம் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். 

Tag: Vastu Pariharam | Vasthu Pariharam Tamil | Vastu Pariharam In Tamil | வாஸ்து குறைபாடு நீங்க | வடகிழக்கு மூலை வாஸ்து | வாஸ்து விதிகள் | Vastu Dosha Nivarana Pariharam In Tamil | Vastu Dosha Pariharam In Tamil | வாஸ்து பரிகாரங்கள் | Vastu Tamil Remedies | Vastu Remedies In Tamil | Veedu Vastu Tamil | Vastu Vinayagar | Vada Kilakku Vastu | Water Vastu For House.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்