வாழ்வில் குறையாத செல்வத்துடன் இன்பமான வாழ்க்கையைக் கொள்ள வேண்டுமென்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும்... இல்லை என்று சொல்ல முடியுமா..! அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள் செல்வ வரவை எதிர்பார்க்காத மனிதன் யாருமில்லை என்பது தான் யதார்த்தம் ஆகும்.
வளமான வாழ்வுக்கு செழிப்பான செல்வ வரவுக்கு லட்சுமி தேவியின் பார்வை அவசியமாகும், காலகாலமாக நம் முன்னோர்கள் லட்சுமி தேவி வழிபாட்டை வழக்கமாக வைத்து வெள்ளிக்கிழமை தினத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிப்பட்டனர். ஆனால் இன்று இருக்கும் அவசர உலகில் செல்வம் சேர்க்க ஓடும் வேகத்தில் செல்வ வரவின் ஆதாரமான லட்சுமி தேவியை வழிப்படுவதை மறந்து ஓடிக் கொண்டு இருக்கின்றனர்.
என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் லட்சுமி தேவியின் பார்வை நம் மேல் இல்லையென்றால் செழிப்பான செல்வ வரவு என்பது கேள்விக்குறி ஆகும், கையில் பணமே நிற்பதில்லை என்ற கவலையா.... அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பற்றிக் காண்போம்.
பரிகாரம் (Selvam Peruga Pariharam in Tamil )
வளமான செல்வ வரவை பெற முதலில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டைச் சுத்தம் செய்து பூஜை அறையை புதிய பூக்கள் மூலம் அலங்காரம் செய்து கொள்ளவும்.
வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வணங்குவது முக்கியமாகும், அதிலும் ஒரு மண் விளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதன் மகத்துவம் லட்சுமி தேவி அந்த ஜோதியில் குடிகொண்டு இருப்பார்.
ஒரு 5 வெற்றிலை மற்றும் பாக்கை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மீது 5 ரூபாய் நாணயத்தையும் 5 விரலி மஞ்சளும் வைத்து தீபாராதனை காட்டுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் (Lakshmi Manthiram Tamil)
லட்சுமி தேவி படத்துக்கு முன்னால் இந்த வெற்றிலை பாக்கு மற்றும் மேற்கூறிய பொருட்களை வைத்து 'ஓம் மகாலட்சுமி நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அடுத்த நாள் (சனிக்கிழமை) இந்த வெற்றிலை பாக்கைப் பசு மாட்டிற்கு அளித்து வர வேண்டும். இவ்வாறு 18 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்து வர லட்சுமி தேவியின் கடாட்சம் நம் வீட்டில் பெருகி செல்வம் குவியும்.
ALSO READ: How to Pooja Maha Lakshmi At home In Tamil: வீட்டில் லட்சுமி தேவியை இப்படி வழிபட்டால் செல்வம் குறையவே குறையாதா...!
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…