ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.
அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் விருச்சிக ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
உங்க ராசிக்கு நான்காவது வீட்டில் அதாவது அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் வக்கிர நிலையும் அடையும் சனிபகவானால் உங்களுக்கு சாதமா அல்லது பாதகமா என்பதை விரிவாக பார்க்கலாம். சுய ஸ்தானத்தை சனிபகவான் வக்ரமடைவது ஓரளவு நன்மைகள் கொடுக்கப் போகிறது. இந்த காலக்கட்டித்தில் மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, எதிலும் ஒரு துணிச்சலுடம் தெளிவுடன் செயல்படுவீர்கள்.
ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அர்த்தாஷ்டம சனியால் தூக்கமில்லாமல், மந்தன்மையோடு இருந்த காலம் முடிவுக்கு வரும். வீண் அலைச்சல்கள் குறையும். தாயாருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பு ரீதியாக இருந்த தடை தாமதங்கள் நீங்கி, ஆர்வத்துடன் படிப்பீர்கள். சிலருக்கு பிடித்த படிப்பை எடுத்து படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
சுப விஷேசங்கள் சம்பந்தமாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் வரலாம். எனவே, ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துக் கொள்ளவும். கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். சிலருக்கு மறைமுகமான ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம். தாமதிக்காமல் மருத்துவரை சந்திப்பது நல்லது. மூன்றாவது நபரை நம்பி உங்க ரகசியங்களை அவர்களிடம் சொல்ல வேண்டாம்.
உத்தியோக ரீதியாக இருந்த கவலைகள், மனஉலைச்சல்கள், பணிச்சுமை ஆகியவை நீங்கி நிம்மதியான சூழல் உருவாகும். இருப்பினும் வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவெடுக்காமல், சிந்தித்து செயல்படுங்கள். கணவன், மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஈகோ பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…