Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Kanavu Palangal in Tamil: நம் கனவில் மனிதர்களைப் பார்த்தால் இது நடக்குமா..! 

Manoj Krishnamoorthi June 09, 2022 & 17:15 [IST]
Kanavu Palangal in Tamil: நம் கனவில் மனிதர்களைப் பார்த்தால் இது நடக்குமா..! Representative Image.

சொப்பனத்தின் காண்பது அம்பலத்தில் ஏறாது என வீட்டில் பெரியவர்கள் கூறி கேட்டுயிருப்போம் ஆனால், சொப்பனத்தில் காண்பது நம் வாழ்வின் நிகழ்வுகளைக் குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நாம் இரவில் தூங்கும்போது ஒருசில சமயம் நம்மை அறியாமல் கனவில் சில நிகழ்வுகளை அல்லது சில மனிதர்களைக் காண்போம்.

இன்னும் சிலர் இறந்த மனிதர்களைக் கூட கனவில் காண்பர் அதற்கு அர்த்தம் எனக் கேட்டால் பலருக்கு தெரியாது, இனி குழப்பம் வேண்டாம். நாம் தூங்கும்போது கனவில் மனிதர்களைக் கண்டால் என்ன பலன் (Kanavu Palangal in Tamil)  என்பதை அறிய மேலும் தொடரவும்.

கனவின் பலன்கள் (Kanavu Palangal in Tamil)

மனிதன் தூங்கும்போது  கனவில் அழகிய மங்கையின் உருவம் தோன்றினால் அல்லது அயல்நாட்டு பிரமுகர் அல்லது அரசியல் பிரமுகர் அல்லது வேறு நபரைக் கண்டால் பெரியதாக எடுத்து  கொள்ள மாட்டான், ஆனால் இதுபோன்ற கனவுகளுக்கும் சில பலன்கள் உள்ளன,

முதல் பலன்

கனவில் அழகிய பதுமையைப் போன்ற பெண்ணை கனவில் கண்டால் உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படப்போகிறது என்பதைக் குறிக்கும்.

இரண்டாவது பலன்

அழகிய பதுமை போன்ற உருவம் கொண்ட பெண் மங்களப் பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைந்தால் உங்கள் மகள் பருவமடையப் போகிறாள் அல்லது மகளுக்கு திருமண முயற்சி கைகூடும் என்பதாகும்.

மூன்றாவது பலன்

ஒருசில சமயம் நம் கனவில் அறிமுகமில்லாத சில மனிதர் தோன்றுவார்கள், அப்படி ஒரு கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் என்பது அர்த்தமாகும்.

நான்காவது பலன்

ஒருவேளை அயல்நாட்டு தூதுவரை அல்லது அரசியல் பிரமுகரைக் கண்டால் புதிய நபரின் நட்பு கிடைக்கும் என்பது அர்த்தமாகும்.

ஐந்தாவது பலன்

நீங்கள் தூங்கி கொண்டு இருக்கும்போது அரசனைக் கண்டால் உங்கள் செல்வாக்கு உயரும் என்பதே இந்த கனவின் பலனாகும்.

ஆறாவது பலன்

கனவில் அந்தணனைக் கண்டால் உங்கள் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சி நடக்கும் என்பது  காரணமாக அமையும்.

ஏழாவது பலன்

ஒருவேளை உங்கள் கனவில் அறிமுகமில்லாத சிறுவனுக்கு நீங்கள் உதவுவது போலக் கனவு வந்தால் உங்களுக்கு செல்வந்தரின் நட்பு கிடைக்கும் என்பதே பலனாகும்.  

பரிகாரம்

கனவு கண்டால் பலன் அறியவில்லை என்றாலுன் கூட தூங்கம் தெளிந்த பிரகு குளித்து உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து கண் மூடி 5 நிமிடம் தியானத்தில் இருந்து உங்கள் வழக்கமான வேலையை செய்ய வேண்டும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்