அமெரிக்காவில் பிரபல புகாட்டி நிறுவனம் 16 சிலிண்டர் எஞ்சினும் 1600 குதிரைத் திறனும் கொண்ட மிஸ்ட்ரால் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் உலகில் அதிக வேகம் உள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கார் 40 கோடி ரூபாய் என விலை நிற்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் காற்றுத் தடை ஏற்படாத வகையில் தாழ்தளத்துடன் மேற்பகுதி திறந்தும் உள்ளது. மேலும், இது போன்ற 99 கார்களை மட்டுமே தயாரித்துள்ள நிலையில் அனைத்துக் கார்களும் விற்பணை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் மணிக்கு 305 மைல் வேகத்தை எட்டியுள்ள நிலையில், புகாட்டி மிஸ்ட்ரால் கார் அதைவிட அதிவேகம் கொண்டதாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…