Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57
Exclusive

கார்களைத் திரும்பப் பெறும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்… இது தான் ரீசனா..?

Editorial Desk Updated:
கார்களைத் திரும்பப் பெறும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்… இது தான் ரீசனா..?Representative Image.

கடந்த 2022 நவம்பர் 2 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தயாரித்த 9,125 கார்களை திரும்ப பெற்று கொள்வதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. காரணம் என்னவெனில் கடந்த 2022 நவம்பர் 2 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தயாரித்த கார்களில் சில சிக்கல்கள் இருப்பதால் அக்கார்களை திரும்ப பெற இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற நவம்பர் மாதம் தயாரித்த Maruti suzuki Ciaz, Maruti suzuki Brezza, Maruti suzuki Ertiga, Maruti suzuki XL6 மற்றும் Maruti Grand Vitara போன்ற மாடல்களில் சில சிக்கல்கள் இருப்பதால் அவற்றை திரும்ப பெற உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 2 ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட மேற்க்கூறிய கார்களில் முன் வரிசை இருக்கையில் உள்ள பெல்ட்களின் தோள்பட்டையின் உயரத்தை சரிசெய்யும் அசெம்பிளி பாகத்தில் குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குறைபாடு குழந்தைகள் காரில் முன் வரிசையில் உக்காரும் போது, சீட் பெட்ல்  வேலை செய்யாமல் போகவும் அல்லது சீட் பெட்ல் எளிதில் கழன்று விடவும் வாய்ப்பு உள்ளதாக Maruti Suzuki நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு , வாடிக்கையாளர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி சந்தேகத்திற்குரிய அனைத்து கார்களையும் ஆய்வு செய்து அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் காரின் முன்வரிசை மற்றும் சீட் பெல்ட் ஆகியவற்றை இலவசமாக மாற்றி தர முடிவு செய்திருப்பதாக Maruti Suzuki நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.   

Maruti Suzuki-யின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களில் இருந்து குறைபாடு கொண்ட காரின்  வாடிக்கையாளர்களுக்கு அல்லது குறைபாடு கொண்ட காரின் உரிமையாளர்களுக்கு போன் செய்யப்படும். பிறகு அவர்களுடைய கார்கள் சோதனை செய்யப்படும். பின் ஏதேனும் சிக்கல் இருந்தால் அது சரி செய்யப்பட்டு, திரும்ப தரப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்