Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,771.36
-130.55sensex(-0.20%)
நிஃப்டி20,069.35
-27.25sensex(-0.14%)
USD
81.57
Exclusive

நடிகர் டூ ஓனர்..! நடிகர் அஜித்குமாரின் புது நிறுவனம்..! இதுல இருக்க ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..? | AK Moto Ride

Gowthami Subramani Updated:
நடிகர் டூ ஓனர்..! நடிகர் அஜித்குமாரின் புது நிறுவனம்..! இதுல இருக்க ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..? | AK Moto RideRepresentative Image.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவர் பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரிடம் இருக்கும் பைக்குகள் ஏராளம். அவை அனைத்தும் வித்தியாசமான பிராண்டாகவே இருக்கும். இவரது கவனம் சினிமா மீது செலுத்தினாலும், தனது பேஷன்களுக்கும் முக்கியத்துவம் தந்தார். ரேஸிங்கில் பங்கேற்பது, சமைத்தல், போட்டோகிராபி போன்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்தின் புதிய நிறுவனம்

பைக் பிரியரான இவர், பைக் தொடர்பான நிறுவனம் தொடங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளார். அவர், தனிப்பட்ட ஆர்வத்தைத் தொழிலாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். நடிகர் அஜித் குமார் இயக்கிய புதிய நிறுவனத்தின் பெயர் மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனம் ஆகும். இதில் என்னென்ன சர்வீஸ் அமையப் போகிறது என்பது தெரியுமா.? இந்நிறுவனத்தில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் கானலாம்.

சூட்டிங்கில் ஸ்டண்ட்

இவர், சினிமா சூட்டிங் செல்லும் இடத்திற்கு பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவாராம். சூட்டிங் முடிந்த பின், மீதி நேரத்தில் பைக்கில் ரைடிங் செய்கிறார். இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் ரைடிங் செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணியயதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. பெரும்பாலும், இவர் நடிக்கும் திரைப்படங்களில் பைக், கார் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

உலக சுற்றுலா

இவரது அடுத்த திரைப்படமான விடாமுயற்சி திரைப்படம் வெளிவந்த பிறகு, இவர் உலக சுற்றுலா செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது இவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நடிகர் அஜித் குமார் அவர்கள், AK Moto Ride என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் டூரில் நிறுவனத்தை துவங்கி உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளில் ரைடர்ஸ், சாகசம் புரிபவர்கள், பயணங்களை விரும்புவோர்கள் என அனைவரும் ரைடிங் செய்ய சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனமாகும்.

வித்தியாசமான அனுபவம் தரும் பயணம்

இந்த ட்வீட்டைப் பார்த்து பலரும் குழப்பத்தில் இருந்துள்ளனர். இந்நிறுவனம் எது போன்ற சேவைகளை வழங்குகிறது என்ற குழப்பம் எழுந்தது. இது வேறு ஒன்றும் இல்லை. இத்தனை ஆண்டுகளாக, நடிகர் அஜித் குமார் அவ்வப்போது சுற்றுலா செல்கிறார். அது போல, நீங்களும் செல்ல இந்த நிறுவனம் உதவுகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணிப்பது ஒரு புது வித அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும். அதிலும், பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிளில் லடாக் செல்வதைக் கனவாக வைத்துள்ளனர். லடாக் போன்ற மற்றநாடுகளுக்கும் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு சொந்தமாக பைக் வேண்டும் அல்லவா..?

AK Motor Ride உதவி

அதே சமயம், சொந்த பைக்கில் சென்றால் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சொந்த பைக்கில் சென்றால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதற்கு தீர்வு சொல்லும் விதமாகவே, தற்போது அஜித் குமாரின் AK Moto Ride நிறுவனம் செயல்பட உள்ளது. இந்நிறுவனம், ரைடு செய்பவர்களுக்கு பாதுகாப்பு வசதியையும், சொகுசு வசதியையும் தருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்