பிஎம்டபிள்யூ தனது பைக் தயாரிப்பில் அடுத்த அப்டேட் ஆக, முகத்தை வைத்து அன்லாக் செய்யும் ஐபேஸ் என்ற பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை பைக்குகளை, முகத்தை மட்டுமே வைத்து ஸ்டார்ட் செய்ய முடியும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த பைக் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதனைப் பற்றி இங்குக் காண்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனமானது, டாக்டர் ஜெர்கால்டு லெஸ்ஜோ என்பவரின் உதவியுடன் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட பைக்கை தயார் செய்துள்ளது. இவர், முனிச் பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவத்திற்கான முன்னணி நிறுவனத்தின் தலைவர் ஆவார். ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளம் காணும் வகையில் அமையக்கூடிய தொழில்நுட்பத்தை இவர் தான் உருவாக்கினார்.
முகத்தை அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பைக் ஆனது, 3D தொழில்நுட்பத்தில் மூலம் இயங்குகிறது. இந்த ஐபேஸ் ஆனது, TFT டிஸ்பிளேயில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போது சிஸ்டம் எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பது தெரியாது. இது பைக்கின் கிளஸ்டருக்குக் கீழ் உள்ளது.
இந்த பைக்கின் செயல்முறையானது Stripe Projection மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, பைக் ஓட்டுபவர் ஹெல்மெட்டை அகற்றும் போது, அவரின் முகத்தை சிஸ்டமானது முப்பரிமாணம் மற்றும் பயோமெட்ரிக் முறை மூலம் ஸ்கேன் செய்கிறது.
இவ்வாறு செய்த பிறகு, படத்தை முன்னரே சேமிக்கப்பட்ட தரவு பதிவோடு ஒப்பிடும். பின், இந்த படம் பொருந்தினால், பைக்கின் ஸ்டியரிங் மற்றும் மற்ற பிற பூட்டுதல் செயல்பாடுகள் விடுவிக்கப்படும். அதன் பிறகு, பைக் ஓட்டுபவர் பைக்கை ஸ்டார்ட் செய்யலாம். இது 3D ஸ்கேனிங் டெக்னானலஜியில் அகச்சிவப்பு ஸ்கேனிங் மூலம் செய்யப்படுகிறது. எனவே, இதனை இருட்டிலும் செயல்படுத்த முடியும்.
இதன் பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்தும் வகையில், ஐரீஸ் கார்னியா ஸ்கேனிங் மூலம் அன்லாக் செய்கிறது. எனவே, ஒருவர் ஹெல்மெட் போட்டிருந்தாலும் கூட அவரை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதன் கூடுதல் பாதுகாப்பாக அடையாளம் தெரியாத நபர் பைக்கை எடுக்க முயன்றால், எமர்ஜென்ஸி தொடர்பு எண்ணிற்குத் தானாக போன் செய்து விடும். இது பைக் திருடப்படும் தகவலை பைக்கின் உரிமையாளருக்கும், பிஎம்டபிள்யூ கால் சென்டருக்கும் தெரிவித்து விடும். இது பைக் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம், பைக் திருடப்படுவதை எளிதாகத் தடுக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…