BMW கார்கள் எப்போதுமே எல்லாரின் ஃபேவரைட் காரின் லிஸ்டில் இருக்கும். EV ரக கார்கள் உற்பத்தியில் BMW ஒரு காரை உருவாக்கி அறிமுகம் செய்ய உள்ளது பற்றி தெரியுமா...? ஆமாங்க BMW iX1 மற்றும் iX1 SUV கார் இந்தியாவில் ஜனவரி 28 யில் லான்ச் ஆகும். இந்த மாடலின் அப்டேட் சென்ற வருடமே கொடுத்திருந்ததால் இந்த வண்டியின் லான்ச் BMW பிரியர்களை எப்போ வருமென காத்திருக்க வைத்திருக்கும்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வெர்ஷனாக அறிமுகமாக உள்ள BMW iX1 கார் 64.7 kWh பேட்டரி பேக் அப் கொண்டது. எனவே ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 439 km தூரம் செல்லலாம். வழக்கமான வேரியண்ட் போலவே செயல்படும் திறன் கொண்ட BMW iX1 313 Bhp பவர் மற்றும் 493 Nm டார்க் வெளிப்படுத்தும்.
எலக்ட்ரிக் வெர்ஷன் BMW X1 ஜனவரி 28 2023 அன்று பெங்களூரில் லான்ச் ஆகும். புதிய iX1 கார் கர்வுடு டிஸ்பிளே , ஒயர்லெஸ் சார்ஜிங் பேடு கொண்டு இருக்குமாம். புதிய ஆப்சன் பல சேர்த்திருக்கும் iX1 யில் சன் ரூப் கொடுக்கவில்லை. இந்தியாவில் BMW X1 யின் விலை 42 லட்சம், அதேவேளையில் iX1 காரின் விலை 62 லட்சம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…