Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சூப்பரான மைலேட்ஜில் குறைந்த விலையில் சிட்ரோன் சி3..! | Citroen C3 Price in India

Gowthami Subramani Updated:
சூப்பரான மைலேட்ஜில் குறைந்த விலையில் சிட்ரோன் சி3..! | Citroen C3 Price in IndiaRepresentative Image.

சிட்ரோன் 3 ஆனது தனது புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு மோனோடோன் மற்றும் ஆறு டூயல்-டோன் கலர்களில் கிடைக்கிறது. இது போன்ற ஏராளமான வசதிகளுடன், சூப்பரான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இதில் காண்போம்.

இருக்கைகள்:

C3 ஆனது, 5 இருக்கைகளைக் கொண்ட அமைப்பில் கிடைக்கும். இதன் பூட் ஸ்பேஸ் ஆனது 315 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது.

அம்சங்கள்:

இதன் சிறப்பம்சமாக, இரண்டு பெட்ரோல் என்ஜின்களுடன் காணப்படுகிறது. 1.2 litre Naturally Aspirated Engine (82PS / 115Nm) 5-Speed Manual-ஐயும், 1.2 litre Turbocharged Unit (110PS / 190Nm) 6 Speed Manual பரிமாற்றத்தைக் கொண்டுள்ளது.

இந்த சிட்ரோன் சி3 ஆனது 10.2 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 35 இணைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்ட தொடுதிரை ஆகும். மேலும், இது உயரத்தை சரிசெய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை, Night / Day IRVM மற்றும் நான்கு ஸ்பீக்கர் ஒலி அமைப்புகளைக் கொண்டுள்ளது.

நிறத்தைப் பொறுத்த வரை, நான்கு மோனோடோன் கலராக ஸ்டீல் கிரே, ஜெஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே, போலார் ஒயிட் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும், ஆறு டூயல் டோன் வண்ணங்களாக ஸ்டீல் கிரே உடன் ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப், ஸ்டீல் கிரே உடன் பிளாட்டினம் கிரே ரூஃப், ஜெஸ்டி ஆரஞ்சு உடன் பிளாட்டினம் கிரே ரூஃப், பிளாட்டினம் கிரே உடன் ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப், ஜெஸ்டி ஆரஞ்சு உடன் போலார் வெள்ளை ரூஃப், மற்றும் பிளாட்டினம் சாம்பல் ரூஃப் உடன் போலார் வெள்ளை போன்ற நிறங்களில் கார்கள் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

இந்த சிட்ரோன் சி3 ஆனது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் படி, பாதுகாப்பு முகப்பில் இரண்டு முன் ஏர்பேக்குகளையும், EBD உடன் ABS-ஐயும், Front seat belt reminders, தலைகீழ் கேமரா, மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும், இதன் டர்போ வேரியன்ட் ஆனது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஷ்டம் (TPMS) உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

சிட்ரோன் சி3 விலை

சிட்ரோன் சி3 கார் ஆனது, ரூ.6.16 லட்சம் முதல் ரூ.8.92 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்