இன்று உலகமே பெட்ரோல் டீசல் வாகனத்தில் இருந்து மின்சார வாகனத்தை நோக்கி செல்கிறது. ஆனால் ஒரு நாடு மட்டும் இன்னும் மின்சார வாகனத்திற்கு தடை விதி உள்ளது என்பது நம்ப முடிகிறதா....? ஆம் ஒரு நாடு உள்ளது, உலகமே மின் மயமாக இருக்கும் நிலையில் ஒரு நாடு மட்டும் ஏன் இப்படி...? இதை பற்றி சுவாரஸ்ய தகவல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித நாகரீகம் வளர ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை நம் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாகனம் நம்முடன் பயணிக்கிறது. முதலில் விலங்களை வைத்து ஆரம்பித்த இந்த பயணம் பன்மடங்கு வளர்ந்து விண்ணில் பறக்கும் நிலையைத் தாண்டி கண்டம் தாண்டும் முயற்சியில் உள்ளது.
இவ்வாறு வளரும் பரிணாமத்தில் பல வளர்ந்த நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு மாற்றாக மின்சாரத்தை ஏற்று கொண்டனர். இன்னும் சொல்ல போனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த தலைமுறையினர் என்ஜின் கார்களை விட மின்சார கார்களைத் தான் அதிகம் பார்த்திருப்பர். ஆனால், மாறாக ஒரு இயற்கை கொஞ்சும் உலக மக்களின் விருப்பமான சுற்றுலா நாடு உள்ளது. அது தான் சுவிட்சர்லாந்து ஆகும்.
உங்களால் நம்ப முடியவில்லையா...? பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு மாற்றாக யோசிக்கும் நிலையில் ஏன்..? சுவிட்சர்லாந்து மட்டும் மின்சார வாகனத்தை வேண்டாம் என்கிறது. இதை (Switzerland Ban Electric Cars) பற்றி கீழே காண்போம்.
உக்ரைன்- ரஷ்யா போர் உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. இதனால் இன்றைய நிலை பல வளர்ந்த நாடுகளும் பெரும் பாதிப்பை சமாளிக்க வேண்டிய நிலை தான். இந்த போரின் விளைவு குறிப்பாக சுவிட்சர்லாந்தில் தான் பெரும் அடியாக இருந்தது.
நம் இந்திய திருநாட்டில் கோடை காலத்தில் ஏசி பயன்பாடு எந்த அளவு எதிர்பார்க்கிறோமோ அதைவிட 60% சுவிட்சர்லாந்தில் ஹீட்டரின் தேவையாகும். காரணம் அங்கு நிலவும் பனி காலம் தான். இந்த பனி காலம் எந்தளவிற்கு என்றால் தண்ணீரே உறையும் நிலையில் இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டின் மின்சார உற்பத்தி ஹைட்ரோ பவர் மூலம் தான் உள்ளது. கோடை காலத்திலே குறைந்த அளவு கிடைக்கும் மின்சார உற்பத்தி பனிகாலங்களில் இன்னும் மோசமாகிவிடும். இதனால் சுவிட்சர்லாந்து மின்சாரத்தை இறுக்குமதி செய்யும்.
2022 ஆண்டு ஆரம்பித்த உக்ரைன்- ரஷ்யா போரால் சுவிட்சர்லாந்தில் மன்சார பற்றாக்குறை ஏற்பட்டது. இது எந்த அளவிற்கு என்றால், சில பகுதிகளில் மின்சாரத்தை பயன்படுத்தவே கடும் தடை விதிக்கப்படும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பனி காலங்களில் ஹீட்டரை கூட பயன்படுத்த முடியாமல் பழங்காலத்தில் செய்தது போல நெருப்பை மூட்ட வேண்டியதாகும்.
இவ்வாறு அன்றாட தேவைக்கே மின்சாரம் பற்றாக்குறை இருப்பது ஹீட்டரை 20 டிகிரி செல்ஸியஸிற்கு கூட்ட வேண்டாம் என அரசு கூறு வகையில் உள்ளது. உலகமே எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தும் மின்சார வாகனத்திற்கு அரசு தடை விதித்து, அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்த உத்தரவு அளித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யாதீர் என அரசு கேட்டு கொண்டுள்ளது.
உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க யோசிக்கும் நிலையில் இருக்கும்போது சுவிட்சர்லாந்து நாடு இந்த வளர்ச்சியில் கால் பதிக்க முடியாத நிலையில் உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…