Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

நீண்ட காலத்திற்குப் பின் வெளிவரும் ஹோண்டா எலிவேட்-ன் அசத்தலான புத்தம் புது மாடல்.! விலை எவ்வளவு தெரியுமா.? | Honda Elevate SUV

Gowthami Subramani Updated:
நீண்ட காலத்திற்குப் பின் வெளிவரும் ஹோண்டா எலிவேட்-ன் அசத்தலான புத்தம் புது மாடல்.! விலை எவ்வளவு தெரியுமா.? | Honda Elevate SUVRepresentative Image.

ஹோண்டா கார் நிறுவனமானது நீண்ட காலத்திற்குப் பிறகு, ஹோண்டா எலிவேட் புத்தம் புதிய மாடல் அறிமுகமாக உள்ளது. இந்த எலிவேட் மாடலின் டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஹோண்டா எலிவேட் SUV காரின் அம்சங்கள், விலை, அறிமுகமாகும் நாள் மற்றும் மேலும் சில முக்கிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி (Honda Elevate SUV)

இந்திய சந்தைக்கான ஹோண்டாவின் முதல் நடுத்தர அளவிலான SUV கார் இந்த ஹோண்டா எலிவேட் SUV கார் ஆகும். இதன் மேல்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது, Raked rear windshield, Roof Rails மற்றும் shark fin antenna உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. இந்த SUV ஆனது Chrome grille மற்றும் LED daytime running lights-ஐக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

ஹோண்டா எலிவேட் SUV கார் ஆனது 10.2 இன்ச் தொடு திரை அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான டீசரில், இந்த SUV அறிமுகம் செய்யும் போது, இதில் Panoramic sunroof இல்லாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த ஹோண்டா எலிவேட் SUV காரின் போட்டியாளர்களான Hyundai Creta, Maruti Grand Vitara மற்றும் Toyota Hyryder போன்றவை Panoramic sunroof உடன் வருவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, எதிர்காலத்தில் வரவிருக்கும் Seltos facelift-லும், இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலிவேட் காரின் ஹெட் லேம்ப் யூனிட்டுகள், LED DRL மற்றும் பின்புற டெயில் லேம்ப்கள் டிசைனுடன் காணபப்டுகிறது. இத்துடன், இரண்டு யூனிட்டுகளையும் இணைக்கக்கூடிய light bar உள்ளது. இந்த SUV ஆனது வண்ணக்கதவு கைப்பிடிகளையும், ORVM-களையும் பெறுகிறது. ஆக மொத்தத்தில், இந்த காரின் டீஸரில் குறிப்பிட்டுள்ள படி, Elevate SUV ஆனது கூர்மையான மற்றும் செதுக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

நடுத்தர அளவு SUV ஆனது, சிட்டியில் இருந்து 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படும். இருப்பினும், அதிக ட்யூன் நிலையில் இருக்கக் கூடிய வலுவான ஹைப்ரிட் பதிப்பு பின்னர் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது டீசல் என்ஜின் பயன்படுத்தும் விருப்பத்தைப் பெறாது.

Honda Elevate SUV அறிமுகமாகும் நாள்

ஹோண்டா எலிவேட் SUV கார் நிறுவனத்தின் வாகனத் தயாரிப்பாளர் வரும் ஜூன் 6 ஆம் தேதி டெல்லியில் இந்த கார் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

Honda Elevate SUV விலை

எக்ஸ்-ஷோரூம் விலைப்படி, இந்த Compact SUV கார் ஆனது ரூ.11 லட்சம் முதல் தொடங்கலாம் என கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்