Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Hyundai Ioniq 5 கார் வருவதற்கு முன்னாடியே பல காருக்கு போட்டியா மாறிடுச்சு!

Manoj Krishnamoorthi Updated:
Hyundai Ioniq 5 கார் வருவதற்கு முன்னாடியே பல காருக்கு போட்டியா மாறிடுச்சு!Representative Image.

Hyundai நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் மாடல் Hyundai Ioniq 5. ஜனவரி 11 2023 முதல் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரில் அப்படி என்ன புதிய விஷயம் உள்ளது என்பதை பார்ப்போம். Ioniq 5 EV காரின் டிசைனிங் மிகவும் அழகாக உள்ளது போல பர்ஃபாமன்ஸ், தாராளமான சீட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதா, இதன் விலை முதலியவை கீழே விரிவுரையாக்கப்பட்டு உள்ளது. 

Hyundai Ioniq 5 கார் வருவதற்கு முன்னாடியே பல காருக்கு போட்டியா மாறிடுச்சு!Representative Image

Hyundai Ioniq 5

Hyundai நிறுவனத்தின் கார்களுக்கு என எப்போதும் தனியிடம் உள்ளது. தென் கொரிய நிறுவனமான Hyundai காரின் ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் ஒருமுறை பயன்படுத்தினால் Hyundai வாடிக்கையாளராக மாற்றிவிடும். எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் Hyundai Ioniq 5 புதியதாக அறிமுகமாக உள்ளது. BMW i4, Tesla Model 3 கார்களை போன்ற அம்சமான டிசைனில் Hyundai Ioniq 5 தயாரிக்கப்பட்டுள்ளது. 

எலக்ட்ரிக் வாகனம் என்பதால் இன்ஜின் பர்ஃபாமன்ஸ் பெட்ரோல் கார்களுக்கு இணையாக இருக்குமா..? என்ற கேள்வி எழும். 350 Nm டார்க்கில் 217 hp பவர் வெளிப்படும் திறன் ஒன்றே  இதன் மோட்டார் தரத்தை எடுத்துரைக்கும். ரியர் வீல் மோட்டாராக காரை வடிவமைத்து இருப்பது  காரின் பர்ஃபாமன்ஸை கூட்டியுள்ளது.

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 631 km தூரம் பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 72.6 Kwh பேட்டரி பொருத்தப்பட்ட Hyundai Ioniq 5 0- 100% சார்ஜ் 18- 20 நிமிடங்களிலே ஏறிவிடும் என்பது கவனிக்க வேண்டியது. 

2023 ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ள Hyundai Ioniq 5 காரின் மதிப்பு 50 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது. Drift mode, virtual shift mode போன்ற ஆப்சன்கள் இந்த காரில் இருந்தும் 50 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் என்பது வாடிக்கையாளருக்கு இன்பமான செய்தியாகும். இந்த காரை வாங்க முன்பணமாக 1 லட்சம் கட்டி பதிவு செய்து கொள்ளும் வசதியை Hyundai உருவாக்கியுள்ளது. 

    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்