எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் பல முன்னணி கார் நிறுவனங்கள் கலமிறங்கியுள்ளது. தங்கள் உற்பத்தி காரை வரிசையாக காட்சிப்படுத்தி விற்பனைக்கு அளிக்கவுள்ளது, இந்த வரிசையில் Hyundai நிறுவனமும் உள்ளது. ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் கொண்ட Hyundai கார்கள் எலக்ட்ரிக் மார்க்கெட்டிலும் தனக்கென தனி மார்க்கெட்டை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SUV காராக உருவாக்கியுள்ள Hyundai Kona Electric காரில் உள்ள வசதிகள் என்ன.. இதன் மதிப்பு என்ன.. என்பதை பற்றி விரிவாக காண்போம்.
நம்முடைய தினசரி பயன்பாட்டை கணக்கில் கொண்டு உருவாக்கிய இந்த Hyundai Kona Electric கார் 201Hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 150 kW 201 HP எலக்ட்ரிக் 132/ 108 மோட்டார் நல்ல ஹைவே டிராவல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ஹவே டிராவலுக்கு தகுந்த மாதிரி வடிவமைத்துள்ளதால் நல்ல பேட்டரி பேக் அப் உள்ளது, இதன் Li Polymer பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 9.25 மணி நேரம் ஆகும்.
நம் டெயிலி யூஸ்ஸேஜ் காராக வடிவமைத்துள்ளதால் காரின் பொழுதுபோக்கு வசதிகள் தாராளமாக கொடுக்கப்பட்டுள்ளது. 6 சீட் காராக வடிவமைக்கப்பட்ட Hyundai Kona Electric பவர் டோர் லாக் சிஸ்டம் கொண்டது ஆகும். டிஜிட்டல் அப்பியரன்ஸ் தரத்தில் லேட்டஸ் வசதிகள் கொண்ட Hyundai Kona Electric ஏர் பில்ட்ரேஷன் வசதியெல்லாம் பொருத்தப்பட்டுள்ளது.
உயர்தர பாதுகாப்பில் கவனம் கொண்ட Hyundai Kona Electric கார் rear child safety lock, ABS பிரேகிங் வசதி கொண்டது ஆகும். குவாலிட்டியான ஏர் பேக் என தற்போதைய பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் இது பூர்த்தி செய்கிறது. 0-100 Kmph செல்ல 9.7 வினாடியே போதும்.
இந்தியாவில் இந்த கார் அறிமுகமானால் இதுவே முதல் SUV எலக்ட்ரிக் கார் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 km தூரம் செல்லும் திறன் கொண்ட Hyundai Kona Electric காரின் விலை 23.84- 24.03 லட்சம் ரூபாய் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…