Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

KGF கிங் யாஷ் வாங்குன கார பாருங்க - சும்மா வேற லெவல்ல இருக்கு!

Abhinesh A.R Updated:
KGF கிங் யாஷ் வாங்குன கார பாருங்க - சும்மா வேற லெவல்ல இருக்கு!Representative Image.

இந்திய சினிமாவை புரட்டிப் போட்ட படம் அது. கே.ஜி.எஃப் என்ற பெயரை கேட்டாலே ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் அளவுக்கு அதில் நடித்திருந்த யாஷ் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இதனால், அவரது நகர்வுகள் அனைத்து இணையவாசிகளால் கொண்டாடப்படுகிறது.

இந்த வேளையில் தான் அவரது புதிய புகைப்படம் ஒன்று இனையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் யாஷ் தனது புதிய கார் முன் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம், வீடியோ எடுத்திருந்தார்.

இணையத்தில் வைரலான இந்த புகைப்படங்கள், வீடியோக்களைத் தொடர்ந்து, அது எந்த கார், அதன் விலை என்ன? என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து எழுந்தது. இப்போது நடிகர் யாஷ், அதாவது உங்கள் ராக்கி பாய் வாங்கி கார் எது என விரிவாகப் பார்க்கலாம்.

KGF கிங் யாஷ் வாங்குன கார பாருங்க - சும்மா வேற லெவல்ல இருக்கு!Representative Image

ராக்கி பாய் வாங்கிய கார்

நடிகர் வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு எஸ்யூவி காராகும். இந்தியாவில் இந்த காருக்கு மிகப் பெரிய வரவேற்பு உண்டு. இதன் விலை கோடிகளை தாண்டுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், இதன் அசரடிக்கும் தோற்றத்தின் காரணமாக, பல செல்வந்தர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகளும் இதனை வாங்கி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த கார் ரூ. 2.39 கோடி தொடங்கி ரூ. 4.17 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே ரேஞ்ச் ரோவர் காரை தான் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு மாஸான சொகுசு காரையே தன்னுடைய பயன்பாட்டிற்காக ராக்கி பாய் தற்போது வாங்கி இருக்கின்றார்.

இதே காரில் டாப் மாடலை யாஷ் வாங்கி உள்ளார். இதன் காரணமாக தான் காரின் விலை ரூ.5 கோடி ரூபாய் வரை சென்றதாகக் கூறப்படுகிறது.

KGF கிங் யாஷ் வாங்குன கார பாருங்க - சும்மா வேற லெவல்ல இருக்கு!Representative Image

இன்னும் நெறய இருக்கு

ராக்கி பாய் யாஷ்  ஏற்கனவே பல சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். அதில் மெர்சிடிஸ் பென்ஸ் டிஎல்எஸ் 350டி, மெர்சிடிஸ் ஜிஎல்சி 250டி கூபே, ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ 520டி, ரேஞ்ச் ரோவர் எவோக், பஜேரோ ஸ்போர்ட் ஆகிய ஆடம்பர கார்கள் அடங்கும்.

எல்லாமே பிரீமியம் கார்கள் வைத்திருக்கும் யாஷ், புதிய கார் வாங்கியதால், ஏதேனும் பழைய கார்களை விற்க போகிறாரா என்பது குறித்து ரசிகர்கள் சலசலத்து வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

KGF கிங் யாஷ் வாங்குன கார பாருங்க - சும்மா வேற லெவல்ல இருக்கு!Representative Image

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு எஸ்யூவியின் சிறப்பு அம்சங்கள்

  • இந்த காரில் ஆடம்பர வசதிகளாக மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • அதிரடி இசைத்திறனுக்காக 13 ஸ்பீக்கர்கள் கொண்ட 825 வாட் மெரெடிசியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளன
  • அனைத்து இருக்கைகளுக்கும் பெரிய பொழுதுபோக்கு திரைகள், பனோரமிக் சன்ரூஃப் என எக்கசக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
  • இந்த காரில் 4.5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
  • இதுதவிர 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல், 4.4 லிட்டர் வி8 டீசல் உள்ளிட்ட வகைகளிலும் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
  • இப்போது இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரே விற்பனையில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்