ஸ்போர்ட் கார் உற்பத்தியில் பிரபலமான MG நிறுவனம், 1920 இல் இருந்து ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியில் இருக்கும் MG தற்போது எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்து காட்சிப்படுத்தி உள்ளது. 2023 இல் அறிமுகமாகவுள்ள MG Air EV காரின் செயல்பாட்டு திறன், விலை, சிறப்பு வசதிகள் போன்ற சுவாரஸ்ய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
காம்பேக்ட்டான டிசைனில் உருவாக்கியுள்ள Air EV கார் 2023 முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் அளவில் சரியான விலையில் விற்கவுள்ளதால் இதுவே இந்தியாவின் முதல் மலிவு விலை எலக்ட்ரிக் கார் ஆகும்.
இரண்டு டோர் 4 சீட் கொண்ட MG Air EV அளவில் சிறியதானது ஆகும். ஒரு நியாயமான பட்ஜெட் காராக உருவாகியுள்ள Air EV யில் இரண்டு முன் ஏர்பேக், ABS பிரேகிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் பாதுகாப்பு விஷயத்தில் சந்தேகம் தேவையில்லை.
பிரட்டன் உற்பத்தியான MG Air EV 17.3 kWh மற்றும் 26.7 kWh என இரண்டு பேட்டரி கொண்டது. ரியர்- வீல் டைரவ் காரான MG Air EV 40 Ps எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட கார் ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200- 300 km தூரம் பயணிக்க முடியும். மே 2023 முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் MG Air EV காரின் விலை 10- 15 லட்சம் ஆகும்.
டிசைனிங்கில் மட்டுமில்லாமல் பல ஆப்சன்களையும் MG Air EV கொண்டுள்ளது. ESC (Electronic Stability Control), ரியர் பார்கிங் கேமரா, 360 டிகிரி கேமரா போன்ற ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 200 Km தூரம் செலும் திறன் கொண்ட Air EV கார் 80% சார்ஜ் ஏற 40 நிமிடம் மட்டுமே போதும். Alto 800 போல தோன்றினாலும் பர்ஃபாமன்ஸ் பொருத்தவரை சிறப்பாக இருக்கும் MG Air EV சிட்டி டிராவலுக்கு ஏற்றதாக இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…