இந்தியாவில் MG மோட்டார் தனது இரண்டாவது மின்சார வாகனமாக Comet EV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னரே, ZS EV-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த Comet EV ஆனது, இந்தியாவிலேயே மிகச்சிறிய முழு மின்சார வாகனம் ஆகும். மேலும், இது நாட்டின் மிகச்சிறிய கார்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
MG Comet EV வாகனம்
காரின் அளவைப் பொறுத்த வரை, 3 மீட்டருக்கும் குறைவான நீளத்தையும், 1,640 மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த கார் ஆனது, 12 இன்ச் அளவு கொண்ட ஸ்டீல் சக்கரங்களைக் கொண்டு இயங்குகிறது.
மேலும், இந்த எலக்ட்ரானிக் வாகனம் ஆனது, 17.3 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 230 கிமீ வரை இயங்கும் என ஆட்டோ நிறுவனம் கூறுகிறது. இந்த கார் இயங்கும் Mode ஆனது, Eco, Normal மற்றும் Sport உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.
Comet EV மோட்டார் வாகனம் ஆனது அதிகபட்சமாக 41hp ஆற்றலையும், உயர்பட்ச டார்க் ஆக 110Nm-ஐக் கொண்டுள்ளது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் 100 kmph ஆகும்.
MG Comet EV அம்சங்கள்
இரண்டு 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரைகள், முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. வாகனம் ஓட்ட ஏதுவாக இரண்டு – ஸ்போக் ஸ்டியரிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
Comet EV வாகனத்தின் விலை மற்றும் நிறம்
Comet EV எக்ஸ்-ஷோரூம் விலையாக அறிமுக விலையில் ரூ.7.98 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 இருக்கை, 2 கதவு என்ற அமைப்பில் இந்த கார் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் வாகனமானது, கருப்பு, வெள்ளி, மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் டூயல் டோன் ஆப்ஷனாக, Green with Black roof மற்றும் White with Black roof-ல் கிடைக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…