TVS XL கிராமப்புறம் முதல் நகர்புறம் வரை பாமர மனிதன் அதிகம் பயன்படுத்தும் வாகனமாக உள்ளது. இந்த வண்டியின் பயன்பாடு சாமானியனின் அன்றாட வாழ்வில் இருந்து மாற்ற முடியாதது ஆக மாறியுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13 முதல் தொடங்கியது, இதில் பல புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒன்று தான் Motovolt நிறுவனத்தின் m7 ஸ்கூட்டர் ஆகும். XL யின் மார்க்கெட்டிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த m7 ஸ்கூட்டரின் விபரங்களை காண்போம்.
TVS XL எல்லாவிதமான பயன்பாட்டிற்கும் தகுந்த பெட்ரோல் வண்டியாக உள்ளது. இந்த பயன்பாட்டில் ஒரு எலக்ட்ரிக் வண்டி இருந்தால் என்ன என்பதை என்றாவது யோசித்து இருக்கிறீர்களா...? அப்படி யோசிச்சு இருந்தா.. Motovolt m7 ஸ்கூட்டர் சரியானதாக இருக்கும். m7 ஸ்கூட்டரின் பின் சீட் கழட்டி மாட்டி கொள்ளும்படியாக உள்ளதால் XL போலவே பாரங்களை ஏற்றி செல்ல முடியும். இதனால் 10 கிலோ வரை பாரம் சுமக்கும் திறன் கொண்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதன் பேட்டரி தான் மூலப்பொருளாக கருதப்படுகிறது. M7 ஸ்கூட்டருக்கு AIS152 2ம் சான்று கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த வண்டி ஒரு லோடிங் வாகனம் போல சிறிய சுமைகளை ஏற்றி செல்ல பயன்படுத்த முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…