Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,709.93
-191.98sensex(-0.29%)
நிஃப்டி20,051.85
-44.75sensex(-0.22%)
USD
81.57
Exclusive

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!

Manoj Krishnamoorthi Updated:
ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!Representative Image.

கார்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துவிட்டது, அதுவும் கார் வாங்குவது பலரின் லட்சியமாக உள்ளது. கார்  வாங்குவது என்றால் அதிகமாக வாங்குவோம். லோனில் வாங்குவதோ இல்லை  முழு பேமெண்ட்டில் வாங்குகிறோமோ முதலில் நம்ம பட்ஜெட்டுக்கு தரமான கார்கள் கிடைக்குமா... என்று பார்ப்போம். இந்த பதிவு மூலம் பட்ஜெட் விலையில் 6.00 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் கார்களின் மாடல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!Representative Image

Tata punch

பட்ஜெட் விலையில் பாதுகாப்பு தரம் அதிகமாக உள்ள கார் என்றால் Tata தான் முதலிடத்தில் இருக்கும்.  நம் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற 11199 cc கொண்ட இன்ஜின் 84.8 bhp பவரை வெளிப்படுத்தும். சுமார் 18 km மைலேஜ் அளிக்கும் Tata Punch கார் 160  km வரை செல்லும் திறன் கொண்டது.

இந்த Tata punch பெட்ரோல் இன்ஜின் கொண்ட 5 சீட் கார் ஆகும். 3 சிலிண்டர் கொண்ட இன்ஜின் மற்றும் மேனுவல்/ அட்டோமெட்டிக் கியர் ஆப்சன் எல்லாம் கவனிக்க வேண்டியது. இதன் விலை 6.00 லட்சம் ரூபாய் ஆகும். 

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!Representative Image

Tata Tigor 

Tata Tigor  6 லட்சம் ரூபாய் ரேஜ் காரில்  4 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் கொண்டது. 1199 cc இன்ஜின் கொண்ட Tigor கார் பெட்ரோல்/ CNG என இரண்டு வேரியண்டில் கிடைக்கும். 6.09 - 7.11 ரூபாய்க்கு விற்பனையாகும் Tata Tigor 19.2- 26.4 km மைலேஜ் அளிக்குமாம். இது மேனுவல்/ ஆட்டோமெட்டிக்  கியர் டேரன்மிஷன் கொண்ட 5 சீட் கார் ஆகும். 

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!Representative Image

Hyundai Aura

பெட்ரோல் மற்றும் CNG வேரியண்டில் இருக்கும் 1197 cc வாகனமான Hyundai Aura 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கிடைக்கும் காரில் ஒன்று. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற Aura 25 km மைலேஜ் அளிக்கும். மேலும் 67.72- 81.8 bhp பவரை வெளிப்படுத்தும் Aura காரின் அதிகபட்ச வேகம் 155 km/l ஆகும். 6 கலரில் 9 வேரியண்டில் கிடைக்கும் இதன் விலை  6.09 லட்சம் முதல் நகரங்களுக்கு தகுந்த மாதிரி மாறுபடும். 

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!Representative Image

Maruti Suzuki

Maruti Suzuki Dzire 

5 சீட் காரான Dzire பட்ஜெட்டில் 6 ரூபாய் ரேஜ்ஜில் கிடைக்கும் காராகும். இது பெட்ட்ரோல் மற்றும் CNG வேரியண்டில் கிடைக்கும். சுமார் 23 km  மைலேஜ் அளிக்கும் 1197 cc இன்ஜின் கொண்டது. ரூ. 6.23 லட்சம்- 7.55 லட்சம் என விலை நகரங்களுக்கு சிறிய மாற்றம் கொள்கிறது. 

Maruti Suzuki Baleno 

Baleno கார் 22.3- 30.6 km மைலேஜ் அளிக்கும் 1197 3cc காம்பேக்ட் கார் ஆகும். 5 சீட் காரான Baleno 9 வேரியண்டில் விற்பனையாகிறது. இதன் விலை 6.42- 7.68 லட்சம் ரூபாய் ஆகும். இது பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு வகையிலும் மார்க்கெட்டில் உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்