Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Nissan-ன் புது எடிஷன் லாஞ்ச்...தெறிக்கவிடும் அம்சங்களுடன் | Nissan Magnite Geza Edition

Priyanka Hochumin Updated:
Nissan-ன் புது எடிஷன் லாஞ்ச்...தெறிக்கவிடும் அம்சங்களுடன் | Nissan Magnite Geza EditionRepresentative Image.

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் மேக்னைட்டின் புது ஸ்பெஷல் வெர்சன் "Magnite Geza"-வை அதன் போர்ட்ஃபோலியோவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் அடுத்து வரும் நாட்களில் Magnite Geza விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. நிறுவனம் காரின் அம்சங்கள் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஒரு சில முக்கிய விஷயங்கள் கசிந்துள்ளது. அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Magnite Geza sub-4m SUVயின் உயர் வகைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. Geza எடிஷனின் வெளிப்புறத்திலும் உள்ளேயும் சில தனித்துவமான பேட்ஜிங் இடம்பெறும். மேலும் 1.0-லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் பவர்டிரெய்ன்கள் இரண்டிலும் கூட வழங்கப்படலாம். 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்-அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றுப்புற விளக்குகள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ரியர்-வியூ கேமரா மற்றும் பீஜ் அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக டூயல் ஏர்பேக்குகள், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடி, வாகன டைனமிக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் மேக்னைட் பதிப்பில் வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே கெசா பதிப்பிலும் கொண்டு செல்லப்படும். நிசான் மேக்னைட்டில் உள்ள 1.0-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 72 PS ஆற்றலையும் 96 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் 5-ஸ்பீடு MT அல்லது AMT உடன் இருக்கலாம். அதே போல 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 PS உச்ச ஆற்றலையும் 160 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த மோட்டார் 5-ஸ்பீடு MT மற்றும் விருப்பமான CVT உடன் கிடைக்கிறது. இந்த புதிய வெர்சன்முன்பதிவுகள் ரூ.11000க்கு தொடங்கப்பட்டுள்ளது. காரின் விலை பற்றிய விவரங்கள் மே 26 அன்று அறிவிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்