Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....!

Manoj Krishnamoorthi Updated:
Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....! Representative Image.

நம் வாழ்வில் வாகனப் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டுதான் இருந்தது. முந்திய காலத்தில் விலங்குகள், பின் சைக்கிள், மோட்டார் வாகனங்கள் என மாறி தற்போது எலெக்ட்ரிக் வாகனமாக வளர்ந்துள்ளது. வாகனங்கள் இயந்திரம் மின்சாரம் மையமாக மாறுவது பல புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பல ஸ்டார்ட்டப் உள்ளன, அதில் ஒன்றான ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய பைக் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. லான்ச் செய்யும் முன்பே 17 ஆயிரம் பேர் இந்த பைக்கை முன்பதிவு செய்துள்ளனர், அப்படி என்ன தான் இருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பைக்கில் அறிய இந்த பதிவு சரியான தேர்வாக அமையும்.

Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....! Representative Image

ஓபன் எலெக்ட்ரிக் (Oben Rorr Electric Bike)

ஓபன் எலெக்ட்ரிக் பெங்களூர் மாநிலத்தை சார்ந்த நிறுவனமாகும், புவியின் மாசு காட்டுப்பாட்டை முன் நிறுத்தி 2020 ஆம் ஆண்டு "ஓலா S1" என்ற மின்சார பைக்கை உருவாக்கியது. ஓலா பைக் தன் முதல் மாதத்தில் 5,00,000 புக்கிங் செய்து சாதனைப்படுத்தியது.

இந்த இ- பைக்கின் தொடர்ச்சியாக ஓலா S1, ஓலா S1 ஏர் போன்ற அதன் அடுத்த வெளியீட்டை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாடல் பைக்கிலும் இருக்கும் புதுமை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பைக்கின் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்தது. ரோர் பைக் சந்தைக்கு 2023 ஆம் ஆண்டு வெளிவரும் நிலையில் மக்கள் மத்தியில் இதன் எதிர்பார்ப்பு அதிகமானது. இதுவரை ரோர் பைக் 17 ஆயிரம் புக்கிங் எடுத்துள்ளதாகவும், இதை 2023 காலாண்டு துவங்கத்திற்கு முன் டெலிவிரி செய்யப்படும் என ஓபன் எலெக்ட்ரிக் சிஇஓ மதுமிதா அகர்வால் பேட்டியளித்தார். 

Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....! Representative Image

ஓபன் ரோர் (Oben Rorr Review)

ரிலீஸுக்கு முன்னரே 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்யும் அளவு இந்த பைக்கில் பல உன்னதமான சிறப்பு அம்சங்கங்கள் உள்ளன. ரோர் பைக் இந்தியா முழுவதும் டீலர் ஷிப் முறையில் விற்பனை செய்யவதாக ஓபன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக  சென்னை, பெங்களூர். ஐதராபாத், மும்பை, புனே, டெல்லி, ஜெய்பூர், ஆமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ய உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் செல்லலாம் என்ற சிறப்பு ரோர் பைக்கின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....! Representative Image

ஓபன் ரோர் சிறப்பம்சங்கள் (Oben Rorr Specifications In Tamil)

ஓபன் ரோர் பைக்கின் முக்கியமான ப்ளஸ் இதன் டிசைன் தான், பார்த்தவுடன் கண் கவரும் வகையில் அமைந்த மாடர்ன் டிசைன் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மற்ற பைக்கில் இருக்கும் DRLS, LED இண்டிகேட்டர், LED டைல் லைட், டிஸ்க் பிரக், அலாய் வீல், டெலெஸ்கோபிக் போர்க் போன்ற ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சாரத்திற்கு மாற ஏற்படும் முக்கிய பயம் அதன் பேட்டரி பேக் அப் தான். ஆனால் ரோர் பைக்கில் இருக்கும் 4.4 KWH லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் 10 kW எலெக்ட்ரிக் மோட்டார் வசதி இந்த சந்தேகத்தையும் தீர்க்கும். 

மாடர்ன் டிசைன் மட்டுமில்லாமல் மாடர்ன் ஸ்போர்ட் பைக்கில் இருக்கும் பிக் அப் வசதிக்கு இந்த பைக் சலிக்காது என்பதை வெளிக்காட்டும் வகையில் 62 NM டார்க் உள்ளது. இதனால் 0- 40 கி.மி வேகம் வெறும் 3 நொடியிலே பொகும் எஅ எதிர்பார்க்கபடுகிறது. பைக் பிரியர்களின் முக்கியமான கேள்வி அதிகபட்சம் இவ்வளவு வேகம் செல்லும் என்பதாகும், அதற்கு நிறுவனம் 100 kmph என்பது ஏற்று கொள்ளப்படுவதாக தான் உள்ளது. 

எலெக்ட்ரிக் பைக் என்றால் மழையில் ஓட்ட முடியுமா...? என்ற குழப்பமா நிச்சியம் தேவையில்லை. இந்த ஓபன் ரோர் வாட்டர் ரெஸ்சிஸ்ட் பைக் ஆகும், மேலும் இது 3 வருட வாரண்ட்டி கொண்டிருப்பது பைக்கின் தரத்தை உயர்த்துகிறது. 60,000 KM தூரம் வரையும் வாரண்ட்டி இருப்பதும் Theft Protection போன்ற வசதி பைக்கின் மீது நல்ல எதிர்பார்ப்பை விதைக்கிறது. 

சிறந்த சிட்டி ரைடு பைக்காக அறிமுகமாகி உள்ள ரோர் ஆட்டோ பேட்டரி கூலிங் வசதி கொண்டதாகும். இவ்வளவு வசதி இருப்பதால் விலை 1 லட்சம் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்