Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

Rafale Car: இது நீங்க எதிர்பார்த்த ரஃபேல் வாட்ச் இல்ல… புதுசா வந்திருக்க கார்!

Abhinesh A.R Updated:
Rafale Car: இது நீங்க எதிர்பார்த்த ரஃபேல் வாட்ச் இல்ல… புதுசா வந்திருக்க கார்!Representative Image.

ரெனால்ட் நிறுவனம் தனது புதிய ரஃபேல் காரை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹைப்ரிட் கூபே-எஸ்யூவி வீல்பேஸ் உள்பட அதன் தளத்தை ஆஸ்ட்ரல் மற்றும் எஸ்பேஸ் கார்களுடன் பகிர்ந்து கொள்கிறது. ரெனால்ட் ரஃபேல் கிளட்ச்லெஸ் ஹைப்ரிட் கார் ஆகும். மைலேஜை பொருத்தவரை இந்த காரில் ஒரு மிகப்பெரும் பிரச்னை உள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரெனால்ட் ரஃபேல் ஒரு புதிய கிரில், ஃபாஸ்ட்பேக் கூரை அமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் அமர்ந்து வரும் பயணிகளுக்கு தலை தட்டாமல் சொகுசாக உட்கார்ந்து வரும் அளவிற்கு இதில் இடம் உள்ளது. சிறந்த ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பை இந்த கார் பெற்றுள்ளது.

இந்த காரின் மொத்த நீளம் 4.7மீ ஆக உள்ளது. இதன் உயரம் 1.61மீ, வீல்பேஸ் 2.74மீ ஆக இருக்கின்றன. எனவே ரஃபேல் எஸ்யுவி வகையில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறது.

Rafale Car: இது நீங்க எதிர்பார்த்த ரஃபேல் வாட்ச் இல்ல… புதுசா வந்திருக்க கார்!Representative Image

ரெனோ ரஃபேல் கார் வகைகள்

ரெனால்ட் ர்ஃபேல் கார் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 194 ஹெச்பி கிளட்ச்லெஸ் ஹைப்ரிட் திறனை அளிக்கும், 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்டு இந்த கார் இயக்கப்படுகிறது.

இரண்டாவது வேரியண்டில் 127hp அட்கின்சன் சைக்கிள் எஞ்சின், நான்கு கியர்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாக இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு 66hp எலக்ட்ரிக் டிரைவ் மோட்டார் இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள இரண்டாவது  மின்சார மோட்டார் ஸ்டார்டர்-ஜெனரேட்டராக வேலை செய்கிறது. இது பெட்ரோல் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய ஊக்கம் அளிக்கிறது. கார் பிரேக் செய்யும் போது கிடைக்கும் ஆற்றலை இந்த பேட்டரி சேகரிக்கிறது. மீண்டும் தேவைப்படும் நேரத்தில் அதன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த வாகனத்திற்கு கிளட்ச் தேவையில்லை.

Rafale Car: இது நீங்க எதிர்பார்த்த ரஃபேல் வாட்ச் இல்ல… புதுசா வந்திருக்க கார்!Representative Image

இந்தியாவில் ரெனால்ட் வசம் உள்ள கார்கள்

Renault Rafale ஐரோப்பிய நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்படும். அப்போது 194hp இரண்டு சக்கர டிரைவ் மாடல் காருடன், 290hp திறன் கொண்ட நான்கு சக்கர டிரைவ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் மிகப் பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த பேட்டரியைக் கொண்டு  48-64கிமீ வரையில் மட்டுமே காரை செலுத்த முடியும் என்பது தான் உண்மை.

இந்தியாவில், ரெனால்ட் தற்போது Kwid, Triber மற்றும் Kiger ஆகிய மூன்று மாடல்க கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ரெனால்ட் ரஃபேல் இங்கு அறிமுகமாகவில்லை என்றாலும், டஸ்டர் காரின் புதிய வெர்ஷன் 2025 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் தலைமுறை டஸ்டர் ஆஃப்-ரோடு சார்ந்ததாகவும், கடினமானதாகவும் இருக்கும் மற்றும் எரிப்பு இயந்திரங்கள், கலப்பினங்களை ஆதரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை