Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

RX 100 Bike Failure Reasons : 2 ஸ்ட்ரோக் பைக்கின் ராஜா RX 100.. ஒரு சரித்திரம்..!

Manoj Krishnamoorthi September 28, 2022 & 16:40 [IST]
RX 100 Bike Failure Reasons : 2 ஸ்ட்ரோக் பைக்கின் ராஜா RX 100.. ஒரு சரித்திரம்..! Representative Image.

90 களில் இருந்து இன்று வரை யாரும் மறக்க முடியாத  மிகவும் பிரபலமான பைக் என்றால் Yamaha RX ஆகும்.  இந்த பைக்கின் உற்பத்தியை Yamaha நிறுவனம் நிறுத்தியபோதும் கூட இளைஞர்களின் கனவு வாகனமாக இன்று வரை திகழ்ந்து வரும் Rx 100 பற்றிய சுவாரஸ்ய தகவலைக் காண்போம். 

மீண்டும் Rx பைக் சந்தைப்படுத்தப்படும் என  2022 ஆம் ஆண்டில் Yamaha அதிகாரப்பூர்வமான அறிவித்த கணம் முதல்  சமூகவலைத்தளத்தில் RX மோகம் தான்.   அப்படி என்ன தான் பைக்கில் இருக்கிறது என்ற கேள்வி கேட்டாலே அது தவறாகும். இன்று கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சூப்பர்ஸ்டார்கள்  பலரும் 90 களில் பயன்படுத்திய பைக்கில் முதல் இடம் RXக்கு தான் உண்டு. 

முதன்முதலில்  1985 இல் சந்தைக்கு வந்த 100 cc பைக்கான  இந்த RX 100, தன் அதீத பெர்ஃபாமன்ஸாலும் கச்சிதமான எடையாலும் இன்று வரை சந்தையில் இதன் பெயர் பிரதிபலிப்பதற்கான சுவார்ஸ்யதமான  விஷயம் ஒன்று இருக்கிறது,  உங்களுக்கு தெரியுமா...!

 

RX 100 Bike Failure Reasons : 2 ஸ்ட்ரோக் பைக்கின் ராஜா RX 100.. ஒரு சரித்திரம்..! Representative Image

RX 100

"2 ஸ்ட்ரோக்" இன்ஜின் என்றாலே அதில் ராஜா RX தான்.  2 ஸ்ட்ரோக் இன்ஜினுக்கு உரிய அந்த எக்ஸாஸ்ட் சத்தம் இன்னும் பலரின் காதில் கேட்கும். அந்த சத்தமே நம்மை 90 களுக்கு இழுத்து செல்லும் 100 cc பைக்கில் 100 கி.மீ வேகம் செல்லும் இரும்புகுதிரை என்று சொன்னால் அது மிகையாகாது.   இந்த பைக்கின் தனித்துவம் என்றால் சிக்கல் தராத இன்ஜின் தான், குறைந்த பராமரிப்பு செலவு  கொண்ட பெர்ஃபாமன்ஸ் பைக் இந்த RX 100 ஆகும். 

90 களில் வேறு எந்த பைக்கிலும் இல்லாத தனித்துவமான எலெக்ட்ரானிக் இக்னீஷன், இன்டேக் போர்ட்டில் Reed Valve போன்ற தொழில்நுட்பம் கொண்டது ஆகும். 1984 முதல் 1996  வரை  பைக் சந்தையில் ராஜாவாக இருந்த RX 100 மாசு கட்டுப்பாடு காரணத்தால் Rx தயாரிப்பில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

RX 100 Bike Failure Reasons : 2 ஸ்ட்ரோக் பைக்கின் ராஜா RX 100.. ஒரு சரித்திரம்..! Representative Image

Rx தயாரிப்பு நிறுத்தம்

இந்த முறை 5 ஸ்பீடு கியர் பாஸ்ஸ் கொண்ட 135 cc இன்ஜின் பைக்காக  RX 100 மீண்டும்   RX135 ஆக களமிறங்கி சந்தையில் தன் ஆக்கரப்பை நிருப்பித்தது. இதன் அடுத்த வேரியண்ட்களாக RX- G மற்றும் RX- Z வெளிவந்த இந்த RX பைக் டிஸ்க் பிரேக், இன்ஜின் கில் ஸ்விட்ச், டேக்கோமீட்டர், ஃப்யூல் கேஜ் என மாடர்ன் வசதிகள் கொண்டது. பல வசதி சேர்த்தும்  RX 100 இன் தனித்துவமான ஹை பெர்ஃபாமன்ஸ் இல்லாதல் தன் இடத்தை இழக்க ஆரம்பித்தது. 

இப்படி சரிந்து கொண்டு இருந்த RX இன் மார்க்கட்டை தக்க வைக்க 2003 முதல் 2005 வரை பிரபலமான RX 135 பைக்கில் 4- ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் ஆகிய வைத்து வந்த இந்த பைக் இழந்த தன் இடத்தை பிடிக்க முடியவில்லை. என்னதான் சுலபமான கையாளுமை, உடனடி பிக்கப், குறைவான எடை, பொறி பறக்கும் பெர்ஃபாமன்ஸ் என அனைத்து அம்சமும் இருந்து தன் இடத்தை அன்று இழந்தது. ஆனால் பைக்கர்ஸ் மத்தியில் RXக்கு இருக்கும் க்ரேஸ், மண்ணில் விழுந்த விதை மீண்டும் துளிர்விடுவது போல RX மீண்டும் மார்க்கட்டில் களமிறங்க உள்ளது.  

Also Read: Oben Rorr Review : வெளியாவது முன்னதாகவே ... 17 ஆயிரம் பேர் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் பைக்....!

Tag: Rx 100 Bike Review In Tamil | Rx 100 Bike Specifications | Rx 100 Bike Failure Reasons | Rx 100 Bike Specifications In Tamil | Rx 100 Bike Features In Tamil | Rx 100 Bike Failure Reasons In Tamil | Rx 100 Bike Features | Rx 100 Bike Production Stopped Year.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்